தினமும் அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

benefits of fig juice in tamil

அத்திப்பழம் ஜூஸ் பயன்கள் | Benefits of Fig Juice in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காமில் இரத்தத்தை அதிகரிக்க செய்யும் அத்தி பழத்தின் ஜூஸ் பயன்கள் என்னவென்று பார்க்கலாம். அத்திப்பழத்தில்  மற்ற பழங்களை விட இந்த பழத்தில் அதிக அளவு Antioxidant  உள்ளது. அத்திப்பழம் ஆனது பெண்களின் கர்ப்பப்பையை பலப்படுத்தவும், ஆண்களுக்கு விந்துக்களை அதிகரிக்கவும் செய்கின்றது. அத்திப்பழம் நன்மை செய்யக்கூடிய பழமாகவும் இருக்கிறது. இந்த பழத்தின் உள்பகுதியில் உள்ள விதைகள் உடலுக்கு நன்மை தருகிறது. அத்திப்பழத்தில் உள்ள தண்ணீர் நரம்பு மண்டலத்தில் நன்மை அளிக்கவும் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பழத்தில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளதால் ஆரோக்கியம் தருவதற்கும், ஜீரணமாவதுற்கும்  பயன்படுகிறது. மேலும் இதன் பயன்களை பற்றி நம் பதிவில் பார்க்கலாம் வாங்க💐

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: 

அத்திப்பழம்  ஜூஸ் வாரம் 2 முறை குடித்து வந்தால் இரத்தத்தை அதிகப்படுத்தி ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்கிறது. ஒரு அத்திப்பழத்தின் 79.11 கிராம் அளவிற்கு தண்ணீர் மற்றும் 74 கிலோ அளவிற்கு கலோரி உள்ளது அதனால் இது  உடலிற்கு தேவையான நீர்சத்துக்களையும் அளிக்கிறது. பச்சை அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் அதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

கர்ப்பப்பைக்கு ஏற்படும் நன்மைகள்: 

 fig juice for pregnancy in tamil

 • பெண்களுக்கு பொதுவாக கருப்பையில் நீர்க்கட்டி, அதிக இரத்தப்போக்கு, கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு அத்திப்பழம்  ஜூஸ் வழி செய்கிறது.
 • அதுமட்டுமில்லாமல் சினை  பையில் உள்ள கருமுட்டையை அதிகப்படுத்துகிறது.
 • கர்ப்பிணி பெண்கள் அத்திப்பழம் ஜூஸ் குடித்தால் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் இரத்த ஓட்டங்களை அதிகப்படுத்துகிறது. இதை கர்ப்பிணிகள் நான்காவது மாதத்தில் இருந்து சாப்பிட்டு வருவதால் குழந்தைக்கு தேவையான எடை, நோய்எதிர்ப்பு சக்தியை  அதிகப்படுத்தி குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
 • கர்ப்பிணிக்கு ஏற்படும் கை, கால் வீக்கங்களும் குறையும். கர்ப்பிணிக்கு  குழந்தை பிறந்தவுடன் கண் பார்வையை அதிகப்படுத்துகிறது.
 • குழந்தை பிறப்பதற்கு முன்பு கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகம் ஏற்படாமல் இருக்க அத்திப்பழம் ஜூஸ்  குடிப்பது நல்லது.

உடலிற்க்கு  அளிக்கும் நன்மைகள்:

 • அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் குறைந்த அளவு கொழுப்பை பெறுவதால் எடை குறைய ஆரம்பிக்கும்.
 • செரிமான கோளாறு மற்றும் பசியின்மை பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் ஜூஸ் குடிப்பது நல்லது.
 • அத்திப்பழத்தில் Antioxidant  அதிகம் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை தருகிறது.
 • இரத்த அழுத்த பிரச்சனைகள்  மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்க்கிறது.
 • அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் எலும்புக்கு வலிமை தருகிறது.
 • அத்திப்பழத்தில் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது.
 • நமது அன்றாட உணவு பழக்கமுறையில் இருந்து கணினி மயமான வாழ்க்கையினால் ஆண்களுக்கு ஏற்படும் விந்து அணுக்கள் பிரச்சனையிலுருந்து  இருந்து விடுபடுவதற்கு அத்திப்பழம் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுக்கிறது.
 • ஆண்மை குறைபாடு நீங்குவதற்கும் விந்து அணுக்கள் அதிகரிப்பதற்கும் 41 நாட்கள் அத்திப்பழம் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.
 • அத்திப்பழம் ஜூஸ் இரவு உறங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட பயன்படுகிறது.
 • அத்திப்பழம் ஜூஸ் மூச்சுக்குழாயில் ஏற்பட்டு உள்ள அழுக்கை சுத்தம் செய்து, தொண்டையில் உள்ள  சளி சவ்வுகளையும் மென்மையாக்கும், மூச்சுக்குழாயில்  உள்ள எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.
 • அத்திப்பழம் ஜூஸ் மலசிக்கல் பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுக்கிறது.
 • சிறுநீர்ப்பை கற்கள்,  சிறுநீர் பிரச்சனைகள் இருப்பவர்கள் அடர்த்தியான அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் வலி இல்லாமல் கற்கள் வெளியேறிவிடும்.
 • அத்திப்பழம் ஜூஸை தினமும் குடித்து வந்தால் முதுமை காலத்தில் ஏற்படும் கண்பார்வை மங்குவதில் இருந்து விடுபடலாம்.
 • அத்திப்பழம் ஜூஸை குடிப்பதால்  மார்பகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
 • சர்ம அலர்ஜியான தேமல், சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் இரத்தத்தில் சுத்தமில்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது. அத்தகைய பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
 • அத்திப்பழம் ஜூஸ் எடுத்துக்கொள்ளும் அளவு  அத்திப்பழம் ஜூஸ்  அல்லது ஒரு நாளுக்கு 3 அத்திப்பழங்கள் சாப்பிடுவது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்