Benefits Of Foot Massage Before Sleeping
வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! இன்றைய நிலையில் நம்மில் பலரும் உணவை விட மருந்து மாத்திரைகளை தான் அதிகமாக உட்கொள்கின்றன. இன்னும் சிலர் உணவு உண்பதற்கு கூட நேரமில்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் நாம் தான் நம்மை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் பதிவில் தூங்கும் முன் பாதங்களில் மசாஜ் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பிரண்டை உப்பில் இவ்வளவு பயன்கள் இருக்கா
தூங்கும் முன் பாதங்களில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
பொதுவாக நம்மில் பலரும் பலவகையான மசாஜ்களை செய்து வருகிறர்கள். அதாவது ஆயில் மசாஜ், தலைக்கு மசாஜ், கை கால்களுக்கு மசாஜ், முதுகு மசாஜ் என்று செய்து வருகிறார்கள். அதுபோல பாதத்திற்கும் மசாஜ் செய்வார்கள். அதுவும் தூங்கும் முன் பாதங்களில் மசாஜ் செய்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
இரத்த ஓட்டம் சீராக:
இன்றைய நிலையில் பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கம்பியூட்டரில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த பாத மசாஜ் சிறந்ததாக இருக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது நம் கால்களுக்கு சரியான இரத்த ஓட்டத்தில் இடையூறு விளைவிக்கும். அதனால் தூங்க செல்லும் முன் பாதங்களில் மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் சீராக செல்ல அனுமதிக்கிறது.
குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா |
நல்ல உறக்கம் வர:
தூங்க செல்லும் முன் பாதங்களில் மசாஜ் செய்வது நல்ல உறக்கத்தை கொடுக்கிறது. பாதங்களில் மசாஜ் செய்வது பதட்டமான மனநிலையை குறைத்து ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கிறது.
கால் வலிகள் நீங்க:
பொதுவாக இன்றைய நிலையில் அனைவருக்குமே கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. அப்படி கால்வலி பிரச்சனைகள் இருப்பவர்கள் தூங்க செல்லும் முன் பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
மன அழுத்தம் குறைய:
பாதங்களில் மசாஜ் செய்வது மன அழுத்தத்தை குறைக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. தூங்கும் முன் பாதங்களில் மசாஜ் செய்வதால் உடல் சோர்வு நீங்கி, மன அழுத்தம் குறைந்து நல்ல உறக்கத்தை கொடுக்கும்.
2 நிமிடத்தில் உடல் சூடு குறைய அருமையான வழி |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |