வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாப்பிள்ளை சம்பாவின் நன்மைகள்…

Updated On: July 19, 2023 12:53 PM
Follow Us:
mappilai sampa
---Advertisement---
Advertisement

மாப்பிளை சம்பா | Bride Groom Rice  

‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனும் முறை தான் தமிழரின் உணவு முறை. நாம் முன்னோர்களின் உணவு முறை அவர்களை பல ஆண்டு நோயில்லாமல் வாழ வகைசெய்தது. ஆனால் இன்றைய உணவு பழக்கங்கள் நம்மை உணவுடன் இணைத்து மருந்தும் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. நாம் முன்னோர்கள் பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்தினர். ஆனால் இந்த நூற்றாண்டு பட்டைதீட்டப்பட்ட அரிசியை பயன்படுத்தும் உடல் நலம் கேள்விகுறியாகவே உள்ளது. நாம் தமிழரின் பாரம்பரிய அரிச்சிவகைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழலியுள்ளோம். அத்தகைய பாரம்பரிய அரிசிகள் குதிரைவாலி மாப்பிளை சம்பா கருப்பு கவுனி, பூங்கார் கைக்குத்தல் அரிசி, மூங்கில் அரிசி போன்ற பல வகை அரிசிகள் உள்ளன. அவற்றில் நாம் இன்று மாப்பிளை சம்பா அரிசியை பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்….

மாப்பிளை சம்பா

மாப்பிளை சம்பா தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும். இந்த அரிசி, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் போன்றவை செய்யலாம்.

மாப்பிளை சம்பாவை விளைவிக்க 155 முதல் 160 நாட்கள் தேவைப்படும்.

 

mappilai sampa benefits

குதிரைவாலி அரிசியை சமைப்பதற்கு முன் அதனை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

மாப்பிளை சாம்பாவின் மருத்துவ குணங்கள்:

இரும்புசத்து மற்றும் துத்தநாக சத்து அதிக அளவில் கொண்டுள்ளதால், ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது.
தசைகள் மற்றும் திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்துக்களை  சேர்க்க உதவுகின்றது.
சக்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுகளில் முதன்மையானது கார்போஹேட்ராட் நிறைந்த உணவுகள் அந்தவகையில் மாப்பிளை சம்பா அரிசி குறைந்த அளவு கார்போஹேட்ராட்  மற்றும் போதுமான அளவு ப்ரோ ஆன்தோசயனின்ஸ் கொண்டுள்ளதால் உடலுள்ள சக்கரையை குறைக்க உதவுகிறது. மாப்பிளை சம்பா அரிசி, ரத்தத்தை சுத்திகரிக்கவும் உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்கவும் உதவுகிறது.

mappilai sampa foods

வரகு அரிசியை சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள்..!

இந்த அரிசியிள்ள ஐயன், ஜின்க், மாங்கனீசு, பாஸ்பரஸ், மாலிப்டினம் போன்ற தாதுக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த அரிசியை பயன்படுத்துவதன் மூலம்  இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்வும், இதில் உள்ள வைட்டமின் B1 வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்சத்து உள்ளதால் நரம்புகளை வலுவுட்டுகிறது.மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்று உண்டாகும் கிருமிகளை அழித்து நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, நரம்புகளுக்கும் வலுக்கொடுக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now