அரிசி கழுவிய தண்ணீரில் ஒளிந்திருக்கும் பல நன்மைகள்…!

அரிசி கழுவிய நீரின் பயன்கள்

அரிசி களைந்த தண்ணீர் நன்மைகள்:

இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி கழுவிய நீரானது (rice wash water), இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏனெனில் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

அரிசி கழுவிய நீரின் பயன்கள் – சருமத்தை பாதுகாக்க:kk

அரிசி கழுவிய நீரில் (rice wash water) இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை டைட் செய்திடும்.

அரிசி கழுவிய நீரின் பயன்கள் – பேஷியல்:

lஅரிசி கழுவிய நிறை தினமும் பேஷியல் க்ளிசராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை துடைத்திடுங்கள்.

சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும். கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.

அரிசி கழுவிய நீரின் பயன்கள் – என்றும் இளமையாக:

pppவெயிலில் அதிகப்படியாக இருப்பவர்களுக்கு சருமம் வறண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவலாம். இவ்வாறு தினமும் செய்து வர என்றும் இளமையாக இருக்கலாம்.

அரிசி கழுவிய நீரின் பயன்கள் – வலுவான கூந்தலை பெற:

riceதினமும் ஒவ்வொரு முறையும் முகத்தை கழுவும்போது அரிசி கழுவிய நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்ச்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அப்போது அரிசிகளுவிய நீரால் (rice water) கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கிக்கும். மேலும் கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.

அரிசி கழுவிய நீரின் பயன்கள் – குழந்தைகளுக்கு:

oooஅரிசி கழுவிய தண்ணீருடன் (rice wash water) இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

அரிசி கழுவிய நீரின் பயன்கள் – உடல் நலம் பெற:

அரிசி கழுவிய நீரை (rice wash water) அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்.

இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்