Stress Relief Tea In Tamil
இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவருக்குமே மன அழுத்தம் அவர்களுக்கே தெரியாமல் இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். உண்மையில் இது ஒரு அசௌகரியமான ஒன்று. மன அழுத்தம் என்பது பார்க்கும் வேலையின் காரணத்தால் அமையலாம். இல்லை வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதிலிருந்து நீங்கள் ஆரம்பத்திலே வெளி வர வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மனதில் ஏற்படும் மன அழுத்தத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாக்குகின்றன. மனதிற்கும் உடம்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் இருக்கும் நோய்கள் தானாகவே குணமடைகின்றன. அப்படி மன அழுத்தத்தில் நீங்கள் இருக்குறீர்கள் என்றால் அதிலிருந்து வெளியே வர உங்களுக்கு சில டீ வகைகளை அறிமுக படுத்துகிறோம். இது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
Mind Relaxing Helps Tea In Tamil :
என்னதான் மனசு இறுக்கமாக இருந்தாலும் டீ குடிக்கும்போது மனது புத்துணர்ச்சியும் உற்சாகத்தையும் தூண்டிவிடுகிறது. அதிலும் மன நலத்திற்காகவே உள்ள டீக்களை தேர்ந்தெடுத்து குடிக்கும்போது உண்மையில் உங்கள் மன நிலை மேம்படுகிறது. அந்த டீ வகைகளை பார்ப்போம்.
அஸ்வகந்தா டீ
அஸ்வகந்தாவில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் பல நோய்களை தடுக்கின்றது. ஊட்டச்சத்து நிபுணரான லாவ்னீத் பாத்ரா அவர்கள் அஸ்வகந்தா டீ மனதின் பதட்டத்தை குறைப்பதாக கூறுகிறார். அஸ்வகந்தா டீ குடிப்பதன் மூலம் மனம் ரிலாக்ஸாக உணர வைக்கிறது. மேலும் உங்கள் தூக்கம் மேம்படுகிறது.
பெருஞ்சீரக டீ
பெருஞ்சீரக டீயை பருகுவதால் வயிறு சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் சரிசெய்வதோடு மன அமைதியை தருகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. இதனால் பதட்டம் ஏற்படாமல் தடுக்கிறது. பெருஞ்சீரக டீயை பருகுவதால் உடலில் நச்சுக்கள் நீக்கப்படுகிறது.
துளசி டீ
துளசி டீ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க படுகிறது. துளசி டீயில் பல வகையான ஊட்ட சொத்துக்கள் காணப்படுகின்றன. இது உங்கள் மனதில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்க செய்கிறது. துளசி டீயை நீங்கள் குளிர்காலத்தில் பருகும்போது சளி, தொண்டை புண் ஆகியவை குணமாகுகின்றன.
செம்பருத்தி டீ
செம்பருத்தி டீ குடிப்பதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தங்கள் குறைக்கப்பட்டு மன அழுத்தம் சரிசெய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி டீ ஒரு மருத்துவ குணம் கொண்ட தேநீராக பார்க்கப்படுகிறது. மேலும் செம்பருத்தி பூ இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது.
எப்போதும் ஒரே மாதிரியான டீயை குடிக்காமல் இதுபோன்ற நன்மை தரக்கூடிய டீயை குடியுங்கள். இதனால் உங்கள் மன நிலை மேம்படும்.
உங்களை புது மனிதனாக மாற்ற இந்த தத்துவங்களை பின்பற்றுங்கள்.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |