உடலுக்கு கேடு தரும் சமையல் பாத்திரங்கள் என்ன தெரியுமா?

samayal pathiragal benefits in tamil

கேடு விளைவிக்கும் சமையல் பாத்திரங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் அனைவரும் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களால் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. அது என்னென்ன  பாத்திரங்கள் என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இன்றைய காலகட்டத்தில் நவீன வாழ்க்கை முறை காரணமாக மாறிப்போன சமையல் பாத்திரங்களால் நாம் சாப்பிடும் உணவுகளில் நஞ்சி கலந்துதான் சாப்பிட்டு இருக்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நாம் உபயோகிக்கும் பாத்திரங்களால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம் வாங்க.

மண்பானை பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

 

பித்தளை பாத்திரங்கள்:

brass

பித்தளை பாத்திரங்கள் என்பது காப்பர் மற்றும் சிங் என்று சொல்ல கூடிய துத்தநாகம் கலந்தவை தான் பித்தளை பாத்திரங்கள் ஆகும்.  இந்த பாத்திரங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. மூட்டு வலி, நோய் எதிர்ப்பு சக்திகள், அலர்ஜி போன்ற நோய்களை குணமாக்கும் தன்மைகள் உள்ளது. ஆனால் சில தீமைகளும் உள்ளது அவை என்னவென்றால் அமில தன்மை உள்ள பொருட்களான எலுமிச்சை, தயிர், தக்காளி போன்ற பொருட்களை  பயன்படுத்த கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

அலுமினிய பாத்திரங்கள்:

aluminum

அலுமினிய பாத்திரங்கள்  விலை குறைந்து கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த அலுமினிய பாத்திரம் மெலிதாக காணப்படுவதால்  பலரும் இதனை அதிகம் பயன்படுத்திக்கின்றோம். இந்த அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவதால் அதில் உள்ள அலுமினிய கனிமமானது அலுமினியம் ஆக்சைடுகள் ஆகா மாறி உணவு சமைக்கும் பொழுது உணவோடு கலந்து உடலுக்கு தீங்கு அளிக்கிறது. அலுமினிய பாத்திரமானது கரையும் தன்மையுடையது இதனால்  உடலிள்ள உள்ளுறுப்பு பாதிப்புகளான நரம்பு மண்டல பாதிப்புகள், கிட்னி பாதிப்புகள் போன்றவை ஏற்படுகிறது.

இரும்பு பாத்திரங்கள்:

iron

இரும்பு பாத்திரங்கள் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தும் பொழுது உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் கிடைக்கின்றது. இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தும் பொழுது அதனை துரு பிடிக்காமல் பாதுகாத்து கொள்வது அவசியம்.

இண்டோலிய பாத்திரங்கள்:

indalium

இண்டோலிய பாத்திரங்களானது அலுமினியம் மற்றும் உலோக கலவைகள் சேர்ந்த பாத்திரம் தான் இண்டோலிய பாத்திரம். இதன் மூலம் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கிறது.

நான் ஸ்டிக் பாத்திரங்கள்:

non stick

நான் ஸ்டிக் பாத்திரங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில்  ஒன்றாகும். இந்த பாத்திரங்களில் உணவு அடிபிடிக்காமல் இருப்பதற்காக அலுமினியம் மற்றும் Teflon என்ற உலகத்தையும் கலந்து தயாரிக்கப்படுவதுதான் நான் ஸ்டிக் பாத்திரங்கள். Teflon கலந்த பாத்திரங்களில் உணவுகள் சாப்பிடும் பொழுது தைராய்டு, உடல் புற்று நோய், செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சில்வர் பாத்திரங்கள்: 

silver

பொதுவாகவே  அனைத்து வீட்டிலும் அதிகமாக சில்வர் பாத்திரங்கள் காணப்படும். சில்வர் பாத்திரங்கள் என்பது குரோமியம் மற்றும் நிக்கல் போன்ற கலவைகள் ஆனவை ஆகும். நிக்கல் அதிகமாக இருக்கும் சில்வர் பாத்திரங்களை உபயோகிக்கும் பொழுது நுரையீரல் பிரச்சனை, கண் பார்வை பிரச்சனை போன்றவ ஏற்படுகிறது.

மண் பாத்திரங்கள்:

Clay Cooking Pots

நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தி வந்த மண் பாத்திரங்களை பயன்படுத்துவது உடலுக்கு அதிக நன்மைகளை தருகிறது. மண் பாத்திரங்களில் சமைக்கும் பொழுது உணவுகள் சுவையாகவும், மணமாகவும் இருக்கிறது. மண் பாத்திரங்களை உபயோகிப்பதால் உடலுக்கு செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

செம்பு பாத்திரங்கள்:

copper

செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. செம்பு பாத்திரங்களை முறையாக பராமரித்து உபயோகிப்பது நல்லது. அதாவது இரும்பு பாத்திரங்களில் துரும்பு பிடிப்பது போல செம்பு பாத்திரங்களிலும் சில நாட்கள் உபயோகித்து வரும் பொழுது பச்சை நிறத்தில் Green copper carbonate காணப்படும.  இவை ஒரு நச்சு பொருள். Green copper carbonate உடலுக்கு செல்லும் பொழுது வயிற்று வலி, பல் சொத்தை, கண் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை முறையாக பராமரித்து உபயோகிப்பது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்