கண் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும் அதன் உணவுகளும்..!

Advertisement

Best Vitamins For Eye Health In Tamil

நம் உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வைட்டமின்களில் உள்ள ஊட்டசத்துக்கள் உடலின் ஒவ்வொரு வித செயல்பாடுகளுக்கும் உதவி செய்கின்றன. ஒவ்வொரு வைட்டமின்கள் ஒவ்வொரு உறுப்புகளை பாதுகாக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு நான் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் உணவுகள் தான் காரணம். கண்கள் ஆரோக்கியத்திற்கும் நாம் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் ஏ உணவுகள் தான் காரணமாக இருக்கிறது. வைட்டமின் ஏ மட்டுமில்லாமல் பி, சி, ஈ போன்ற வைட்டமின்களும் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இந்த வைட்டமின்கள் எப்படி கண்களை பாதுகாக்கின்றன என்பதையும் வைட்டமின் ஏ, பி, சி, ஈ காண உணவுகளையும் இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

கண்பார்வை பல மடங்கு அதிகரிக்க டிப்ஸ்..!

கண்களை பாதுகாக்கும் வைட்டமின்கள்:

வைட்டமின் ஏ:

வைட்டமின் ஏ என்பது ரோடோப்சின் (Rhodopsin) என்ற புரதத்தின் அங்கம். வைட்டமின் ஏ ஊட்டச்சத்து கண்களுக்கு தேவைப்படுகிற அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் ஏ குறைபாடு இரவு குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கலாம். எனவே நம் உடலில் வைட்டமின் ஏ போதிய அளவில் இருக்க வேண்டும்.

வைட்டமின் ஏ ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • அடர்ந்த பச்சை இலை காய்கறிகள்
  • சால்மன் மீன்
  • ப்ரக்கோலி
  • ஆப்ரிகாட்
  • பால் பொருள்கள்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • கேரட்
  • பூசணி விதைகள்
  • டர்னிப் கீரைகள்
  • கடுகு கீரை
  • குடை மிளகாய் போன்றவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் பி:

கண்களின் ஆரோக்கியத்துக்கு பி வகை வைட்டமின்கள் மிக அவசியம். குறிப்பாக வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்பட்டால் உடலில் ரத்த ஓட்டம் மெதுவாகி ரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படும். இதனால் கண்களிலும் ரத்த ஓட்டம் பிரச்சனை ஏற்படும். வைட்டமின் பி உணவுகள் குளுக்கோமா போன்றவ கண் பாதிப்புகளை குணப்படுத்தி கண்களை ஆரோக்கியமாக வைத்திற்கும். அதனால் தினசரி உணவில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, பி12 ஆகிய பி வகை வைட்டமின்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

வைட்டமின் பி ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • வைட்டமின் பி1 தயமின் – பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சை பட்டாணி, தயிர்
  • வைட்டமின் பி2 ரைபோஃப்ளேவின் – ஓட்ஸ், தயிர், பால், மஷ்ரூம், பாதாம்
  • வைட்டமின் பி3 நியாசின் – சிக்கன், சால்மன் மற்றும் டுனா மீன், பழுப்பு அரிசி, வேர்க்கடலை.
  • வைட்டமின் பி6 பைரிடாக்சின் – கொண்டைக்கடலை, அடர் பச்சை நிற காய்கறிகள், சால்மன் மற்றும் டுனா மீன்
  • வைட்டமின் பி 9 ஃபோலிக் ஆசிட் -அடர் பச்சை நிற காய்கறிகள், வேர்க்கடலை, பீன்ஸ், கடல் உணவுகள், சூரியகாந்தி விதைகள், முட்டை
  • வைட்டமின் பி1 கோபாலமைன் – மீன், கல்லீரல், இறைச்சி, முட்டை

வைட்டமின் சி:

வைட்டமின் சி புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் கண் பாதிப்புகளை சரிசெய்ய உதவுகிறது. வைட்டமின் சி குறைபாடு கண் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இது கண்புரை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க வைட்டமின் சி உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் சி ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய்
  • ஆரஞ்சு, க்ரேப் ஃப்ரூட் மற்றும் தக்காளி
  • கிவி
  • ஸ்ட்ராபெர்ரி
  • முட்டைக்கோஸ்
  • காலிஃப்ளவர்
  • ​கீரைகள்​
  • ப்ரக்கோலி
  • ப்ளாக்பெர்ரி
  • க்ரேப் ஃப்ரூட்

வைட்டமின் ஈ :

வைட்டமின் ஈ ஊட்டச்சத்து ஆல்பா டோகோபெரோல் (tocopherol) ஆகும். இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை (Free Radical) எதிர்த்து போராட செய்கின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் கண்ணுக்குள் இருக்கும் புரதங்களை சேதப்படுத்தலாம். இது கண்புரை வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வைட்டமின் ஈ உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ஈ ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • பாதாம்
  • சூரியகாந்தி விதைகள்
  • வேர்க்கடலை
  • மாம்பழம்
  • சோயா
  • வீட் ஜெர்ம் ஆயில்
  • அஸ்பாரகஸ்

லூடின் சத்து:

லூடின் என்பது கரோட்டீனாய்டுகள். இந்த கரோட்டினாய்டுகள் இலைவடிவ காய்கறிகளில் மிக அதிள அளவில் இருக்கின்றன. இவை நம்முடைய கண்திரைகளையும் ரெட்னாவையும் (Raetna)பாதுகாக்கும். இது குளுக்கோமா மற்றும் கண் நோய்களை தீர்க்க உதவுகிறது.

லூடின் சத்து ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • முட்டையின் மஞ்சள் கரு,
  • மக்காச்சோளம்,
  • ப்ரக்கோலி,
  • லெட்யூஸ்,
  • பட்டாணி,
  • ஸ்பின்னாச்

ஜிங்க் சத்து:

ஜிங்க் சத்து நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மிக முக்கியமான மினரல்களில் ஒன்றாகும். கண்களில் உள்ள ரெட்டினா, நரம்பு செல்கள் மற்றும் கண்களின் புரத அமைப்பு ஆகியவற்றைின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த மினெரல் நம்முடைய கண்களை புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

ஜிங்க் சத்து ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • பின்ஸ்
  • கொண்டைக்கடலை
  • நட்ஸ் வகைகள்
  • முழு தானியங்கள்
  • பூசணிக்காய் விதை
  • பால்

​ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்த கொழுப்பு அமிலங்கள் நம்முடைய கண்களில் உள்ள ரெட்டினா சேதமடையாமல் பாதுகாக்கிறது. கண்களில் புரை ஏற்படாமல் தடுக்கிறது.

​ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஊட்டச்சத்துகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

  • மத்தி, சால்மன், டூனா உள்ளிட்ட மீன் வகைகள்
  • ஆளி விதை
  • வால்நட்
  • சியா விதை
  • ஆலிவ் ஆயில்
  • அவகேடோ

உங்கள் கண்களை பாதுகாக்கவும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மேலே குறிப்பிட்டுள்ள வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். கண்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்க இந்த 2 டிப்ஸ் போதும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement