வெற்றிலை மருத்துவ பயன்கள் பற்றி அறிந்துக் கொள்வோம் வாங்க..!

வெற்றிலை மருத்துவ பயன்கள்

வெற்றிலை மருத்துவ பயன்கள் பற்றி அறிந்துக் கொள்வோம் வாங்க..! (Betel leaf benefits in tamil)

வெற்றிலை மருத்துவ பயன்கள்: அனைவருக்கும் வணக்கம் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அவர்கள் எதை செய்தாலும் அதில் கண்டிப்பாக ஆயிரம் நன்மைகள் இருக்கும். நம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் எதுவுமின்றி வாழ காரணம். அவர்களது உணவு முறைதான். நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது.

இந்த வெற்றிலை போட்ட பாட்டிகள் பாட்டன்கள் 70 வயதை தாண்டியும் பற்கள் உறுதியாக இருந்தது. கண் நன்றாக தெரிந்தது, ஜீரண மண்டலம் சரியாக இயங்கியது. இது போன்ற எண்ணிலடங்கா நன்மைகள் கிடைத்தது. இந்த வெற்றிலை கொண்டு எத்தகைய உடற்குறைபாடுகள், நோய்கள் போன்றவற்றை தீர்க்கலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..!

வெற்றிலை மருத்துவ பயன்கள் (Betel leaf benefits in tamil):-

வெற்றிலை மருத்துவ பயன்கள் – வாயு தொல்லை நீங்க:-

இந்த வாயு தொல்லை நீங்க வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக விளங்கிருக்கிறது. நமது உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை போன்றவை ஏற்படுகின்றது.

மேலும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை இவை இரண்டும் சரியாக ஒன்று அல்லது இரண்டு வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி, வயிற்றி வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்கள் வரை செய்து வர வாயு தொல்லை நீங்கும்.

வெற்றிலை மருத்துவ பயன்கள் – பசி இன்மை நீங்க:

சிலருக்கு பசி அதிகம் எடுக்காமல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள். ஒரு வெற்றிலையை எடுத்து அதனுடன் சிறிதளவு பாக்கு மற்றும் சுண்ணாம்பு தடவி சாப்பிடுவதினால் பசி இன்மை நீங்கும். பின்பு பசி அதிகம் எடுக்க ஆரம்பிக்கும்.

2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க – அருமையான வழி..!

வெற்றிலை மருத்துவ பயன்கள் – அடிபட்ட காயம் ஆற:

வெட்டு காயம், அடிபட்ட காயம், புண் போன்றவை உடனே ஆற சிறிதளவு வெற்றிலையை எடுத்து அரைத்து. அவற்றை காயங்கள் மீது பூசுவதினால் காயங்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.

வெற்றிலை நன்மைகள் – சிறுநீரக பிரச்சனை சரியாக:-

முதியவர்கள் மற்றும் சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சற்று பிரச்சனை ஏற்படும். அப்படி பட்டவரக்ள் தினமும் வெற்றிலை சாற்றினை பருகி வர.

சிறுநீர் சம்மந்த உறுப்புகளில் இருக்கும் நச்சுக்கள் நீங்கும். சிறுநீர் அதிக அளவு பெருகி சீரான கால இடைவேளையில் சிறுநீர் கழிக்க செய்து உடல் நலத்தை மேம்படுத்த செய்கின்றது இந்த வெற்றிலை.

சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..!

வெற்றிலை மருத்துவ பயன்கள் – வாய் புண் குணமாக:-

வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

வெற்றிலை நன்மைகள் – தலைவலி நீங்க:

டென்ஷனால் ஏற்படும் தலைவலி குணமாக ஒரு 10 வெற்றிலையை எடுத்து கொள்ளுங்கள். அவற்றை மைபோல் அரைத்து நெற்றியில் பற்றுபோடுங்கள்.

பின் 1/2 மணி நேரமாவது நன்றாக உறங்குங்கள். இவ்வாறு செய்வதினால் தலைவலி தானாகவே சரியாகிவிடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips tamil