Betel Nut Benefits And Side Effects In Tamil
கொட்டைப் பாக்கு என்பது பாக்கு மரத்தில் இருந்து பெறப்படும் கொட்டையாகும். கொட்டைப் பாக்கு ஆசிய மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதியில் விளைகின்றது. தமிழர்கள் கொட்டைப் பாக்கை அனைத்து விஷேஷங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. கொட்டைப் பாக்கில் ஏராளமான நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. அவற்றை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
நம் தமிழர்கள் எல்லோரும் பாக்கு பயன்படுத்துவார்கள். தாத்தா பட்டி முதல் இளைஞர்கள் வரை யாரும் பாக்கு பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். கொட்டைப் பாக்கை வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு ஓடு சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏராளமான நன்மையை தந்தாலும் இதில் கெடுதலும் இருக்கின்றது.
கொட்டைப் பாக்கு நன்மைகள்:
- கொட்டைப் பாக்கு சாப்பிடும் போது கோழைமலம், இரைப்பையில் உள்ள கிருமிகள் நீங்கும். கொட்டை பாக்கை தூளாக்கி பல் துலக்கினால் பற்கள் உறுதியாகிவிடும்.
- வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து உண்ணும்போது பித்தம், வாதம் கட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.
- பாக்கில் உள்ள துவர்ப்பு பித்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். சுண்ணாம்பில் இருக்கும் காரம் வாதத்தை போக்கும். வெற்றிலை கபத்தை நீக்கும். ஆனால் இவற்றை அளவாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.
- பாக்கில் தயார் செய்யப்படும் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அசிடிட்டி, வாயு தொந்தரவு, கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்சனைகளுக்கு இந்த டீ நல்லது என்று கூறுவார்கள். ஆனால் பாக்கு அடிக்கடி எடுத்து கொள்ளக் கூடாது. இதில் சில பக்க விளைவுகளும் உண்டு.
கொட்டைப் பாக்கு தீமைகள்:
- கொட்டைப் பாக்கு சில உடல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் புற்றுநோயாக வகைப்படுத்துகிறது. இது குறித்து பல ஆய்வுகள் வெற்றிலை பயன்பாட்டுக்கும் வாய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துகிறது.
- இது வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறு பிரச்சனைகள், அதிகரித்த உமிழ்நீர், சிறுநீரக நோய், இதய நோய், மார்பு வலி, அசாதாரண இதயத்துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் மற்றும் விரைவான சுவாசம், மாரடைப்பு , கோமா போன்ற விளைவுகளை உண்டு செய்யலாம்.
- கொட்டைப் பாக்கை நீண்ட காலம் பயன்படுத்தும் நபர்களின் உடல் நலத்திற்கு கேடு உண்டாகும்.
- கொட்டைப்பாக்கை தொடர்ந்து மென்று சாப்பிடுவது பல் ஈறுகளில் எரிச்சலை உண்டாகும். வாய், உதடு சிவக்கும். மலம் கூட சிவப்பு நிறத்தைல் வெளிப்படலாம். பற்சிதைவு ஏற்படும். பற்கள் நிரந்தரமாக அடர் சிவப்பு அல்லது கருப்பு நிறமாக மாறலாம்.
- இந்த பாக்கு பயன்படுத்துபவர்களுக்கு ஃபைப்ரோஸிஸ்க்கு(Fibrosis) வாய்ப் புற்றுநோய்க்கு அதிக ஆபத்து இருப்பதாக அமெரிக்க பல் மருத்துவ சங்க மூலத்தின் ஜர்னல் ஒன்று தெரிவிக்கிறது.
கொட்டைப் பாக்கு யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது:
- கர்ப்பிணி பெண்கள், ஆஸ்துமா, இதயகோளாறுகள், இரைப்பை குடல் அடைப்பு, வயிற்றுப்புண்கள், சிறுநீர் பாதை அடைப்பு, வலிப்புத்தாக்கங்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கொட்டைப் பாக்கு பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- இந்த பிரச்சனை உள்ளவர்கள் பாக்கு சாப்பிட்டால் அது பிரச்சனையை மேலும் வளர செய்யும்.
- அதனால் கொட்டைப் பாக்கு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |