பிஸ்கட் தீமைகள்
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படி என்ன தகவலாக இருக்கும் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள் என்றெல்லாம் கேட்கிறீர்களே என்று யோசிப்பீர்கள். அதை தெரிந்து கொள்வதற்கு முன் பிஸ்கட் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா சொல்லுங்கள்..! பிஸ்கட் பிடிக்கும் தினமும் சாப்பிடுவேன் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள். என்னது பிஸ்கட்டில் தீமைகளா..? என்று ஆச்சரியமாக கேட்பீர்கள். ஆமாம் பிஸ்கட்டில் தீமைகளும் இருக்கிறது..? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
டீ, காபியுடன் பிஸ்கட் நனைத்து சாப்பிடுவது நல்லதா.. கெட்டதா.. |
தினமும் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..?
பெரும்பாலும் நாம் அனைவருமே அன்றாடம் பிஸ்கட் சாப்பிட்டு வருகிறோம் அல்லவா..! இன்னும் சொல்லப்போனால் பலரும் பிஸ்கட் இல்லாமல் டீ குடிக்கவே மாட்டார்கள். அவ்வளவு ஏன் 6 மாத குழந்தைகளின் உணவு பட்டியலில் பிஸ்கட் இடம் பெற்றுள்ளது.
அப்படி பிஸ்கட்டை அனைவருமே சாப்பிடும் பட்சத்தில், அதை தினமும் சாப்பிடலாமா..? தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று நீங்கள் யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதன் தீமைகளை இங்கு காணலாம்.
இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும்:
பெரும்பாலும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் பொதுவான பொருட்களில் பாமாயில் ஒன்றாகும். இது கொழுப்பு அடிப்படையிலான ஒரு பொருள். இது மலிவானது என்பதால் இதை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாமாயில் ஆக்ஸிஜனேற்ற திறனையும் குறைக்கிறது. மேலும் நாம் பாமாயிலில் தயாரித்த பிஸ்கட்களை சாப்பிடும் போது இருதய நோய்க்கான சில ஆபத்து காரணிகளை அதிகரிக்க செய்கிறது. அதனால் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்
பிஸ்கட்டில் உப்பு இருக்கா..?
நாம் சாப்பிடும் இனிப்பு பிஸ்கட்டில் 0.4 கிராம் உப்பு உள்ளது. அப்படி நாம் தினமும் பிஸ்கட் மூலம் அதிகப்படியான உப்பை உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இது வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.
இரத்தத்தில் தீங்கு விளைவிக்கும்:
நாம் கடையில் வாங்கும் பிஸ்கட் மற்றும் குக்கீகளில் Butylated hydroxytoluene (BHT) மற்றும் Butylated hydroxyanisole (BHA) உள்ளன. ஆய்வுகளின் படி, இவை இரண்டும் மனித இரத்தத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
சாப்பிட்ட உடன் டீ குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த சின்ன அட்வைஸ் கேட்டுக்கோங்க
தினமும் பிஸ்கட் சாப்பிடலாமா..?
பிஸ்கட்களில் அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதேபோல பெரும்பாலான பிஸ்கட்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதா ஆரோக்கியமற்றது. அதனால், இது சர்க்கரையை விரைவாக சுழற்சியில் வெளியிடுகிறது. இதனால் இன்சுலின் எழுச்சி ஏற்படுகிறது. இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடலாமா.. சாப்பிடக்கூடாதா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |