இரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil

இரத்த புற்றுநோய் என்றால் என்ன?

Blood Cancer Symptoms in Tamil:- லுகேமியா என்பது இரத்தத்தில் அல்லது எலும்பு மஜ்ஜைகளில் ஏற்படக்கூடிய ஒரு புற்றுநோய் ஆகும். எலும்பு மஜ்ஜைகள் தான் உடலில் இரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஆகவே இரத்த அணுக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இரத்த புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது லிகோசைட் அல்லது வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கின்றது. லுகேமியா உடலில் எலும்பு மண்டலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக அதிகளவில் உடல் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யும். நமது உடல் பல Lymphocytes-ஐ உற்பத்தி செய்தால் அது Lymphocytes Leukemia அல்லது Lymphoblastic Leukaemia பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தமாகும். இந்த இரத்த புற்றுநோய் என்பது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் என்றும் சொல்லாம். சரி இந்த பதிவில் லுகேமியா என்று சொல்லப்படும் இரத்த புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

இரத்த புற்றுநோய் அறிகுறிகள் | Blood Cancer Symptoms in Tamil

உடல் சோர்வு:

உடல் சோர்வு

Blood Cancer Symptoms in Tamil: 1 உடலில் சோர்வு அல்லது பலவீனம் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இந்த அறிகுறியானது பெரும்பாலும் இரத்த சோகை பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். உடலில் சிவப்பணுக்கள் குறைபாடுகள் ஏற்படும் போது உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனமாக காணப்படும். இந்த அறிகுறியானது தங்களுக்கு எப்போதாவது ஏற்படுகின்றது என்றால் இந்த விஷயத்தை நீங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளலாம். ஆனால் உடல் எப்போதுமே சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கிறது என்றால் இந்த விஷயத்தில் நீங்கள் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

மூச்சு திணறல்:

மூச்சு திணறல்

Blood Cancer Symptoms Tamil: 2 மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக காரணங்கள் இருக்கிறது. நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த மூச்சு திணறல் பிரச்சனை ஏற்படும். இருப்பினும் இரத்த புற்றுநோய் உள்ளவர்களுக்கும் இந்த மூச்சு திணறல் பிரச்சனை ஏற்படுகின்றது. இதற்கு என்ன காரணம் என்றால்? லுகேமியா உள்ள நோயாளிகள் மிகவும் களைப்பாக உணர்கின்றனர். அதே சமயம் அரிதான சந்தர்ப்பங்களில் அவர்கள் மூச்சு திணறலுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே மூச்சு திணறலும் இரத்த புற்றுநோய் இருப்பதற்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

சிராய்ப்பு:-

Leukemia Symptoms

இரத்த புற்றுநோய் அறிகுறிகள்: 3 நமது உடலில் எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாமல் உடலில் திடீரென காயங்கள் ஏற்படுகின்றது என்றால் அது லுகேமியா நோய் இருப்பதற்கான அறிகுறியாகும் அசாதாரணமாக ஏற்படும் காயம் என்பது குறைந்த ப்ளேட்லெட் அல்லது பிற இரத்த உறைதலில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த காயங்கள் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக இவை கைகள் மற்றும் கால்களிலேயே ஏற்படுகின்றன.

இரத்த போக்கு:

இரத்தம்

ரத்த புற்றுநோய் உள்ளவர்களுக்கான அறிகுறி வரிசையில் இருக்கும் அறிகுறிதான் அசாதரண ரத்த போக்கு. அதாவது ஈறுகள், குடல், நுரையீரல் அல்லது தலையில் சிராய்ப்பு, அசாதரண ரத்த போக்கு என்பவை ப்ளேட்லெட்டில் ஏற்படும் குறைப்பாடு மற்றும் இரத்த உறைதலில் உள்ள பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறிகளாகும். இது லுகேமியாவின் கடுமையான அறிகுறிகளாகும்.

தோலில் தோன்றும் சிறப்பு புள்ளிகள்:

சிறப்பு புள்ளிகள்

நம் உடல் பகுதியில் தோன்றும் சிறு சிறு சிவப்பு புள்ளிகள் கூட நமக்கு இரத்த புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்று உணர்த்துகிறது. மேலும் இந்த அறிகுறிகள் தோல் நோயாக கூட இருக்கலாம். ஆகவே இந்த அறிகுறியை கண்டு அச்சம் கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

உடலில் எற்படும் வீக்கங்கள்:

ஈறுகள்

நமது உடலில் திடீரென ஏற்படும் வீக்கங்கள் மற்றும் ஈறுகள் விரிவடைந்தால் கூட அவை இரத்த புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஈறுகளில் வீக்கம் அல்லது ஈறுகள் விரிவடைவது என்பது ஹைபர் பிளாசியா என அழைக்கப்படுகிறது. குறிப்பாக லுகேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் காணபடுகின்றதாம். இது மிகவும் வெளிப்படையான லுகேமியாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். மேலும் லூகேமியா நோயாளிகளை பரிசோதிக்கும் போது அவர்களது ஈறுகள் பெரிதாகிவிட்டதா என்பதை முதலில் மருத்துவர்கள் சோதனை செய்கின்றனராம்.

எலும்பு வலி:

எலும்பு வலி

இந்த அறிகுறி வயதானால் அனைவருக்கும் ஏற்பட கூடிய சாதாரண அறிகுறி என்றாலும் எலும்புகளில் உள்ள வலி என்பது தொடர்ச்சியான மற்றும் கடுமையாக இருக்குமெனில் அது லுகேமியாவின் அறிகுறிகள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. எனவே உங்கள் எலும்புகளில் தொடர்ச்சியான லேசான வலி முதல் தீவிர வலி வரை எதை உணர்ந்தாலும் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

தலைவலி:

தலைவலி

தலைவலி என்பது பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்பட கூடிய பிரச்சனையாகும். பொதுவாக உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் இரத்த சிவப்பு அணுக்களே ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இந்த அணுக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது இதனால் தலைவலி போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அமெரிக்க புற்றுநோய் சங்கம் கூறுகிறது. இருப்பினும் ஒருவருக்கு தொடர்ந்து மோசமான தலைவலி ஏற்படுகிறது என்றால் அது ரத்த புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil