வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கிறதா.! அப்போ இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க..

body heat reduce juice in tamil

உடல் சூடு குறைய

உடல் சூடு எப்பொழுதும் இருப்பதை  விட, கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாகஇருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நாமும் ஒரு நாளைக்கு இரண்டு நேரம் குளிப்பார்கள். ஜூஸ் குடிப்பார்கள். இருந்தாலும் உடல் சூடு குறைந்திருக்காது. உடல் சூடு அதிகமாக இருந்தால் நாம் சோர்வடைவோம். கழிவு நீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படும். அதனால் இந்த பதிவில் கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு சில ஜூஸ் பார்ப்போம் வாங்க..

நெல்லிக்காய் ஜூஸ்:

நெல்லிக்காய் ஜூஸ்

முதலில் நெல்லிக்காயை கட் செய்து மிக்சியில் சேர்த்து சாறாக பிழிந்து கொள்ளவும். நெல்லிக்காய் சாறுடன் தேன் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.  ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.

மாதுளை ஜூஸ்:

மாதுளை ஜூஸ்

மாதுளை உள்பகுதியில் இருக்கும் சுளைகளை மட்டும் எடுத்து, மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் காய்ச்சிய பால் சிறிதளவு, சீனி சிறிதளவு சேர்த்து அரைத்து ஒரு கிளாஸ் தினமும் குடித்து வரவும்.

உடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்..!

வெள்ளரி ஜூஸ்:

வெள்ளரி ஜூஸ்

 கோடை வெப்பத்தை தணிக்க வெள்ளரி ஜூஸ் சிறந்தகாக இருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை அளித்து புத்துணர்ச்சியூட்டும் ஒரு காயாக வெள்ளரிக்காய் இருக்கிறது. இது கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ள ஒரு காய்கறியாக உள்ளது. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வதற்கு முதலில் வெள்ளரிக்காயை தோல் உரித்து, கட் செய்து கொள்ளவும். மிக்சி ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சி சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். வடிகட்டிய சாறுடன், எலுமிச்சை சாறு, தேன், சீரக பொடி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த வெள்ளரிக்காய் ஜூஸை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை குடித்து வரவும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்:

மேல் கூறப்பட்டுள்ள ஜூஸை மட்டும் குடித்தால் மட்டும் போதாது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இளநீர் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

நீங்கள் காலையில் ஒரு முறை மற்றும் மாலை நேரத்தில் ஒரு முறை என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடல் சூடு அதிகமாக இருப்பதைக் காட்டும் சில அறிகுறிகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil