வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காய்கறிகளை வேகவைத்த நீரில் இத்தனை நன்மைகளா ?

Updated On: April 2, 2026 5:13 PM
Follow Us:
kaaigariyigalai vegavaitha neerin nanmaigal
---Advertisement---
Advertisement

Are There So Many Benefits Of Boiling Vegetables In Water In Tamil

நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றன என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மாமிச உணவுகளை காட்டிலும் காய்கறிகளில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன. அவை பல்வேறு நோய்களை தீர்கின்றன. காய்கறியில் மட்டுமில்லாமல் காய்கறிகளை வேகவைத்த நீரிலும் அதிக சத்துக்கள் இருக்கின்றன. இவை பல நோய்களுக்கு மருந்தாக இருக்கின்றன. மேலும் இதனை தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகளை வேகவைத்த நீரின்  மருத்துவ குணங்கள் :

vegetabiles boiling tamil

சில காய்கறிகள் குழம்பில் சீக்கிரமாக வேக முன் கூட்டியே வேக வைப்போம். வேகவைத்த பின் காய்கறி வெந்த நீரை கீழே ஊற்றி விடுவோம். காய்கறி வெந்த நீரில் அவ்வளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்ற. இனிமேல் காய்கறிகளை வேகவைத்த பின் வேகவைத்த நீரை கீழே ஊற்றாதீர்கள். என்னென்ன காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் மருத்துவ குணங்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை :

எலுமிச்சை வேகவைத்த நீரில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது இவை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் வேகவைத்த எலுமிச்சையின் நீரை குடிக்கும்போது இரத்த அழுத்தம் சமமான அளவிற்கு வந்துவிடும்.

சௌ சௌ :

சௌ சௌ வேகவைத்த நீரில் மிளகு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து விடும். உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ரால் கரையப்படும். முக்கியமாக வயிற்றில் உள்ள கொழுப்புகள் கறைந்து தொப்பை குறைந்துவிடும்.

பீட்ரூட் :

பீட்ரூட் வேகவைத்த நீரில் வெள்ளம் கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்தசோகை பிரச்சனை சரியாகிறது. மற்றும் பீட்ரூட் வேகவைத்த நீரில் வினிகர் கலந்து தலையில் பொடுகு, அரிப்பு, மற்றும் புண் இருந்தால் இந்த தண்ணீரை தலையில் தேய்த்து வைத்து சேகரித்து நேரம் கழித்து குளித்தால் கூடிய விரைவில் குணமாகிவிடும்.

கொத்தவரை :

கொத்தவரை வேகவைத்த நீரை குடிக்கும்போது உடலில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

முள்ளங்கி :

முள்ளங்கி வேகவைத்த  நீரை குடிக்க சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைகின்றன. சிறுநீரக தொற்று குணமாகின்றன. இரத்தத்தில் காணப்படும் கெட்ட நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

பீன்ஸ் :

பீன்ஸ் வேகவைத்த நீரை குடிப்பதனால் வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் ஆகியவை நாளடைவில் குணாமாகுகின்றன. உடலில் ஏற்பட்ட புண்களில் இந்த நீரினால் கழுவினால் புண்கள் சீக்கிரத்தில் ஆறிவிடும்.

பூண்டு :

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்  ஏற்படும்  வயிற்றுவலி சரியாக பூண்டு வேகவைத்த நீரை குடித்து வர வயிற்று வலி காணாமல் போகும்.

முட்டைகோஸ் :

முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்தால்  கண்ணில் ஏற்படும் புரை சீக்கிரத்தில் மறையும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க முட்டைகோஸ் வேகவைத்த நீரை சூப் போல் செய்து குடித்து வரலாம்.

முட்டைக்கு இணையான சத்துக்களை தரக்கூடிய காய்கறிகள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Pregnancy Hip Pain Relief in Tamil

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்..!

summer disease in tami

கோடை காலத்தில் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ..!

வாக்கிங் போகும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

kodaikaalathil seiya koodatha thavarugal

கோடைகாலத்தில் செய்யக்கூடாத தவறுகள்…!

வெயில் காலங்களில் வெற்றிலையை இப்படி கூட பயன்படுத்தலாமா?

How To Reduce Body Heat Naturally in Tamil

எப்போதும் இருப்பதை விட வெயில் காலத்தில் உடலில் அதிக ஹீட் இருக்கிறதா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

uppu kadalai juice benefits in tamil

உப்பு கடலையை இப்படியா சாப்புடுகிறீர்கள்..! அப்போ இதை கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க..!

symptoms for health disease from nail

நம் நகங்களை வைத்தே நம் நோய்களை கண்டறிய முடியும் தெரியுமா ?