வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுரைக்காயின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: November 11, 2024 11:36 AM
Follow Us:
Bottle Gourd Benefits And Side Effects in Tamil
---Advertisement---
Advertisement

Bottle Gourd Benefits And Side Effects in Tamil | சுரைக்காய் நன்மைகள் தீமைகள் 

வெயில் காலத்தில் பெரும்பாலும் அதிக தண்ணீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் இது போன்ற உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகின்றனர். அத்தகைய உணவுகளில் அதிகம் சேர்த்து கொள்ள கூடிய ஒன்று தான் சுரைக்காய். இந்த சுரைக்காயில் நீர் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் சுரைக்காயை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சுரைக்காயில் நன்மைகள் இருப்பது போல சில தீமைகளும் இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் சுரைக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ காலிபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

சுரைக்காய் நன்மைகள் தீமைகள்:

சுரைக்காய்:

  • சுரைக்காய் ஒரு வெப்பமண்டல தாவரம் ஆகும். இதனை பயிர் செய்வது மிகவும் எளிதான ஒன்று.
  • இதன் தாயகம் தென்னாப்பிரிக்கா. ஆனால் இந்த சுரைக்காய் தென்னாப்பிரிக்காவை அடுத்து இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் அதிகமாக உற்பத்தி செய்கின்றன.
  • இந்த சுரைக்காய் நீங்கள் பயிர் செய்த 15 நாட்களில் வளர்ச்சி அடைய துடங்கிவிடும். அதன் பிறகு 40 அல்லது 45-வது நாட்களில் காய் காய்த்து 60 நாட்களில் நீங்கள் கொடியில் இருந்து அதனை பரித்து விடலாம். இது பச்சை நிறத்தில் 2 அடி நீளமும் 3 அடி அகலத்திலும்  இருக்கும்.

சுரைக்காயின் சத்துக்கள்:

  1. வைட்டமின் A
  2. வைட்டமின் B1
  3. வைட்டமின் B6
  4. போலேட் 
  5. பாஸ்பரஸ் 
  6. மெக்னீசியம் 
  7. இரும்புசத்து
  8. கால்சியம் 
  9. துத்தநாகம்
  10. நார்ச்சத்து 
  11. கொழுப்புச்சத்து
  12. கார்போஹட்ரேட் 
  13. புரோட்டீன்

சுரைக்காய் நன்மைகள்:

சுரைக்காய் நன்மைகள்

  • சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து நமது உடலில் செரிமான கோளாறு வராமல் சாப்பிட உணவு உடனே செரிமானம் ஆகுவதற்கு நன்மை அளிக்கிறது.
  • இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வராமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • இந்த சுரைக்காயில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது. ஆகையால் உடல் சூட்டிற்கு ஒரு சிறந்த மருந்தாக சுரைக்காய் பயன்படுகிறது. எனவே உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் சுரைக்காயை சாப்பிட்டால் எடுத்து கொள்வது நல்லது.
  • அதுபோல சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக சுரைக்காய் சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையே வராது.
  • மேலும் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் மதிய உணவின் போது சுரைக்காயை ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிட்டால் பித்தம் சமநிலை அடைந்து விடும்.
  • இத்தகைய சுரைக்காய் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை போக்குவதற்கும் மற்றும் மூல நோய்க்கும் சிறந்த பலனை தருகிறது. 
பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

சுரைக்காய் தீமைகள்:

சுரைக்காய் தீமைகள்

  • சுரைக்காயில் நன்மைகள் இருக்கும் அளவிற்கு சில தீமைகளும் இருக்கிறது. வாதம் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் சுரைக்காயை அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு தீமை விளைவிக்க கூடியதாகும். 
  • அதேபோல தொப்பை உள்ளவர்கள் சுரைக்காயை எப்போதாவது ஒரு முறை மட்டும் சாப்பிட்டால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுரைக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • சுரைக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒற்றை தலைவலி, கண் பார்வை குறைவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது.

சுரைக்காய் சாப்பிட வேண்டியவர்கள்:

  • உடல் சூடு உள்ளவர்கள்
  • பித்தம் அதிகமாக உள்ளவர்கள்
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள்
  • கை, கால் எரிச்சல் உள்ளவர்கள்

சுரைக்காய் சாப்பிடக்கூடாதவர்கள்:

  • வாதம் உள்ளவர்கள்
  • இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்
  • அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  • அலர்ஜி உள்ளவர்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்

 

Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now