Buttermilk With Salt Side Effects in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கபோகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே நம்முடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் நாம் சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று நினைப்போம்.
அதுபோல தற்போது வெயில் காலம் வேற வந்துவிட்டது. இந்த நேரத்தில் நாம் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அப்படி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களில் ஓன்று தான் இந்த மோர். ஆனால், வெயில் காலத்தில் மோர் அதிகமாக குடிக்க கூடாது. மேலும் மோர் குடிப்பதால் ஏற்ப்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
வெயில் காலத்தில் மோர் குடிப்பதால் இவ்வளவு தீமைகளா..
மோரில் உப்பு கலந்து குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
இன்று நாம் மோரில் உப்பு கலந்து குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் பார்க்க போகின்றோம். பொதுவாக மோர் என்றாலே அதில் உப்பு போட்டு தான் சாப்பிடுவோம். அதிலும் நாம் குடிக்கும் அனைத்து ஜூஸ் வகைகளிலும் சுவைக்காக உணவில் சிறிதளவு உப்பு சேர்ப்போம்.
பொதுவாக மோர் குடிப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. ஆனால் நாம் மோரில் உப்பு கலந்து குடிப்பதால் நம் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆனால் மோரில் உப்பு இல்லாமல் எப்படி குடிப்பது என்று யோசிப்பீர்கள். ஆகவே மோரில் உப்பு கலந்து குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
சேதமடையும் பாக்டீரியாக்கள்:
நாம் மோரில் உப்பு கலந்து குடிப்பதால் அதில் இருக்கும் சோடியமானது வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை பாதிப்பு அடைய செய்கிறது. இதன் காரணமாக வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால், வயிற்று வலி, வயிற்று போக்கு, செரிமான பிரச்சனைகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல், மோரில் உப்பு கலந்து குடிப்பதால் வயிறு கனமாகவும், வீக்கம் இருப்பது போலவும் காணப்படும்.
மேலும், மோரில் உப்பு கலந்து குடிக்கும் போது புரோபயாடிக்குகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது நம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது.
நீரிழப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கானது:
நீரிழப்பு பிரச்சனை உள்ளவர்கள், மோரில் உப்பு கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் மோரில் உப்பு கலந்து குடிக்கும் போது அது உடலில் உப்பின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு பிரச்சனை உண்டாகிறது.
அமிலத்தன்மையை உண்டாக்கும்:
பொதுவாக மோரில் உப்பு கலந்து குடிப்பதால் அசிடிட்டி ஏற்படுகிறது. இதன் காரணமாக வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது.
சளி மற்றும் இருமல் பிரச்சனை:
சாதாரணமாகவே நாம் மோர் குடிப்பதால் பலருக்கு சளி கோளாறுகள் உண்டாகின்றன. அதிலும் நாம் மோரில் உப்பு கலந்து குடித்தால் அது நெஞ்சில் தங்கி இருக்கும் சளியுடன் சேர்ந்து இருமல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
ஆகவே முடிந்தளவு மோரை உப்பு இல்லாமல் குடிக்க பழகுங்கள். அது தான் உடலுக்கு நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |