Can Diabetics Eat Bananas in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் வாழும் இந்த அவசர உலகில் யாருக்கு என்ன நோய் வரும் என்றே சொல்ல முடியாது. அப்படி ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். நோய்க்கு மருந்து கண்டுபிடித்த காலம் மாறி புதிதாக நோய்களை கண்டுபிடித்து வருகிறோம். இதற்கு நம்முடைய சுற்றுசூழலும், உணவு முறையும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
சரி அதை விடுங்க..! உங்களிடம் ஒரு கேள்வி..? சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா..? இதற்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடலாமா.. சாப்பிடக்கூடாதா
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா..?
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதுபோல மாத்திரை மருந்துகளையும் சரியாக சாப்பிட வேண்டும். இதை விட முக்கியமானது என்னவென்றால் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையோ அல்லது பழங்களையோ அதிகமாக உட்கொள்ள கூடாது.
அதுபோல பழங்களில் அரிதாக கிடைக்க கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அதனால் வாழைப்பழம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இருந்தாலும் நம்மில் பலருக்கும் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா..? என்ற கேள்வி இருக்கும். அதை பற்றி இங்கு காணலாம்.
சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும் |
நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்:
ஒரு வாழைப்பழத்தில் ஏறக்குறைய 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக நிறைந்துள்ளது. நார்ச்சத்துக்கள் பொதுவாக சர்க்கரையின் அளவை குறைக்க செய்கின்றன. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லது தான் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது ரொம்ப பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட கூடாது. அதுபோல நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 நடுத்தர அளவிலான வாழைப்பழங்களை சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |