Can Diabetics Fast In Ramadan in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினம் ஒரு பயனுள்ள தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக இப்போது இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு தொடங்கிவிட்டது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மார்ச் 12 முதல் துவங்கி உள்ளது. இந்த தேதியில் இருந்து அவர்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.
அதிகாலையில் மட்டும் சாப்பிட்டுவிட்டு, அன்று முழுவதும் விரதம் இருப்பார்கள். இந்த ரமலான் நோன்புவை அனைவருமே கடைபிடிக்க வேண்டும். ஆனாலும் இந்த ரமலான் நோன்புவிலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன. அது என்னவென்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி வாங்க நண்பர்களே இன்று என்ன பதிவை பற்றி பார்க்கப்போகிறோம் என்று பார்க்கலாம்.
ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் இந்த விதிமுறைகளை Follow பண்ணுங்க..
சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பு இருக்கலாமா..? இருக்க கூடாதா..?
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் என்றால், அவர்கள் அனைத்திலும் கவனமாக தான் இருக்க வேண்டும். அதிலும் சாப்பாட்டு விஷயத்தில் சொல்லவே வேண்டாம். அதிக கவனம் தேவை.
அதுபோல இஸ்லாமியர்கள் அனைவரும் கண்டிப்பாக ரமலான் நோன்பு இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நம் அனைவருக்குமே மனதில் ஒரு சந்தேகம் எழும். அதாவது சர்க்கரை நோயாளிகள் இந்த ரமலான் நோன்பு இருக்கலாமா இருக்க கூடாதா என்று பல கேள்விகள் இருக்கும்.
காரணம் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். அதேபோல சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஒரு வேளை அவர்கள் சாப்பிடவில்லை என்றாலும் மயக்கம், படபடப்பு போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடும்.
இதுபோன்ற ஓரு சூழ்நிலையில் அவர்களுக்கு ரமலான் நோன்பு இருக்கலாமா இருக்கக்கூடாதா என்ற கேள்வி வரும். எனவே அந்த கேள்விக்கான பதிலை இப்போது காணலாம்.
பொதுவாக குர்ஆனின் புனித நூலின் படி, கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ரமலான் நோன்பிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு எடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..
இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் ஒருமுறை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ரமலான் நோன்பானது 11- 16 மணிநேரம் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
இப்படி இருக்கையில் சர்க்கரை நோயாளிகள் எப்படி நோன்பு இருக்க முடியும். மேலும் சர்க்கரை நோயாளிகள் நோன்பு இருந்தால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். அதை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைகிறது.
- இரத்த குளுக்கோஸ் அளவை பெரிய அளவில் பாதிக்கும்.
- நீரிழிவு கெட்டோஅசிடோசிஸையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
- போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்காவிட்டால், உடல் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது.
- இதனால் கீட்டோன்கள் எனப்படும் கழிவுப் பொருட்கள் உருவாகிறது.
- இது இரத்தத்தை அமிலமாக்குகிறது.
- மேலும் நோன்பு இருந்தவர்கள் விரதம் முடிந்த உடன் அதிகமாக சாப்பிட்டால், அது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்க செய்கிறது.
- தண்ணீர் குடிக்காமல் நோன்பு இருப்பதால் அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.
எனவே சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் புனித நூலான குர்ஆனின் படி, கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ரமலான் நோன்பிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அவர்களின் மருத்துவரின் ஆலோசனை பெற்று ரமலான் நோன்பு இருக்கலாம்.
ரமலான் நோன்பு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |