Can You Drink Tea With Food in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு டீனா ரொம்ப பிடிக்குமா..? ஏன் அப்படி கேட்கிறேன் என்றால் இன்றைய பதிவில் டீ பிரியர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்களை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். பொதுவாக நம் அனைவருக்குமே டீ என்றால் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலர் ஒரு நாளைக்கு 5 டீக்கு மேல் குடித்து வருகிறார்கள். அப்படி குடிப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் சாப்பிட்டவுடன் டீ குடிப்பது தான் தவறு. சரி நீங்கள் சாப்பிட்டவுடன் டீ குடிப்பீர்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க நண்பர்களே அதனால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொள்ளலாம்.
டீயுடன் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ அதில் இருக்கும் தீமைகளை தெரிஞ்சிக்க வேண்டாமா |
சாப்பிட்ட உடன் டீ குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..?
பொதுவாக நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் இருக்கும். என்னவென்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை. சாப்பிட்டவுடன் டீ குடிப்பவர்களை தான் கூறுகிறேன். பெரும்பாலும் நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் இருக்கிறது. அதுபோல சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் என்றாவது இது நல்லதா அல்லது கெட்டதா என்று யோசித்தது உண்டா..? சரி அதற்கான பதிலை இங்கு காணலாம்.
பொதுவாக சாப்பிட்ட உடன் டீ குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் தேயிலைகள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. மேலும் டீ மற்றும் காபியில் உள்ள டானின் இரும்பு சத்து உறிஞ்சுதலுக்கு இடையூறாக இருக்கிறது. தேநீரில் உள்ள பீனாலிக் போன்ற சேர்மங்கள் வயிற்றில் இரும்பு வளாகங்களை உருவாக்குகிறது.
👉டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா
இதன் காரணமாக நாம் புரதச்சத்து உள்ள உணவை உட்கொண்டால், டீயில் உள்ள அமிலம் புரத உள்ளடக்கத்தை கடினமாக்குகிறது. இதனால் செரிமான பிரச்சனை, அலற்சி, மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |