Can You Give Honey to Children in Tamil
குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது வாயில் தேன் தடவி விடுவார்கள். ஆனால் குழந்தை என்றால் அனைத்து குழந்தைக்கும் தேன் கொடுக்க கூடாது. அது பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
சிலர் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது தேனை வாயில் வைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு..! அது ஏன் என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா?
குழந்தை அழும் போது அழுகையை நிறுத்துவதற்கு வாயில் தேன் ஊட்டி விடுவார்கள். குழந்தையும் அதை சாப்பிட்டவுடன் அழுகையை நிறுத்தி விடுவார்கள். வீட்டில் உள்ளவர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு தினமும் தேனை வாயில் வைப்பார்கள். இதனை செய்யவே செய்வாதீர்கள் அது முற்றிலும் தவறு..!
ஏனென்றால் தேனில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் எனும் ஒரு பாக்டீரியாக்கள் உள்ளது. அது குழந்தையில் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அதை கொடுக்காதீர்கள்.
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வயதிற்கு மேல் தான் உருவாக தொடங்கும். அதற்கு முன் தேனை கொடுப்பதால் குழந்தைக்கு அதனை எதிர்த்து போராட முடியாது. தேனில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தையின் செரிமானத்தை பாதிக்கும்.
இதனால் குழந்தைக்கு ‘பொட்டுலிசம் நோய்’ எனும் நோய் வரக்கூடும். அதனால் குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உடல் பலவீனமாகும். மலச்சிக்கல் ஏற்படும். மேலும் சில பிரச்சனைகள் வரக்கூடும்.
பிறந்த குழந்தைக்கு தேனை கொடுத்த பிறகு அதனுடைய அறிகுறி தெரியாது அது தெரிவதற்கு 8 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரம் கூட ஆகலாம்.
இதனுடைய அறிகுறி குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும், என்ன செய்தாலும் அழுகையை நிறுத்த முடியாது.
அடிவயிற்றில் வலி ஏற்பட்டு கையை வயிற்றில் வைத்து அழுது கொண்டே இருக்கும்.
பசி இருக்கும் ஆனால் பால் குடிக்காது. அதனால் குழந்தை பலவீனம் ஆகும். உடல் எடை குறைய கூடும்.
குழந்தை கண்களை மூடியே அழுகும். இது போல் ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி மருந்து மாத்திரையை பெற்றுக்கொள்ளவும்.
குளிர்காலத்திலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |