புற்றுநோய் அறிகுறிகள் என்ன? | Cancer Symptoms in Tamil

cancer symptoms in tamil

புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?

Cancer Symptoms in Tamil:- சத்தமே இல்லாமல் நமது உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நமது உயிரை தின்று மரணத்தின் வாசலுக்கு அழைத்து செல்லும் நோய்களில் ஒன்றுதான் புற்றுநோய். இந்த நோய் வந்து விட்டால் மரணம் என்பது உறுதி என்ற எண்ணம் மாறினாலும். மக்களுக்கு இந்த நோய் மீது உள்ள பயம் மட்டும் மாறவில்லை. இத்தகைய புற்றுநோய் எந்த நோயாக இருந்தாலும் வரும்முன் நம்மை காப்பதும் ஆரம்ப நிலையிலேயே சிறந்த சிகிச்சை பெறுவதும் நல்ல தீர்வாக அமையும். சரி  இந்த பதிவில் புற்றுநோய் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

புற்றுநோய் என்றால் என்ன?

நமது உடலில் அடிப்படையாக உள்ள செல்களை பாதிக்கும் நோய் தான் புற்றுநோய். இந்த நோயை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன். நம் உடலில் இயல்பாக உள்ள செல்கள் எவ்வாறு புற்றுநோய் செல்களாக மாறுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நமது உடல் பலவகையான செல்களினால் ஆனது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க இந்த செல்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல செல்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய செல்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய செல்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.

இத்தகைய கட்டிகளை புற்றுநோய் கட்டி என்று சொல்லமுடியாது. எல்லாக் கட்டிகளுமே கேன்சர் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை. அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.

சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் வர காரணம்?

இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணங்கள் என்று எதுவும் இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் (செல்கள்) வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.

உதாரணத்துக்கு: புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை இம்மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம்.

எச்.ஐ.வி:

சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.

குறிப்பு:

நெருங்கிய உறவினர்களுக்குப் புற்றுநோய் இருந்தால் மருத்துவரிடம் விபரம் தெரிவித்து புற்றுநோய் உங்களுக்கு வரும் வாய்ப்பு குறித்து கலந்தாலோசிக்கவும்.

எச்.ஐ.வி அறிகுறிகள்

புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

நமது உடலில் புற்றுநோய் ஏற்படுத்தும் விளைவுகளை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கூறப்பட்டுள்ள அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். ஆகவே, இத்தகைய அறிகுறிகள் தங்களுக்கோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

  1. குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு.
  2. முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்.
  3. நாக்கை அசைப்பதில் சிரமம்.
  4. மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
  5. உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான் வலி ஏற்படும்.
  6. உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம்.
  7. காரணமில்லாமல் எடை குறைவு.
  8. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil