கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் | Carbohydrates Rich Food List in Tamil
carbohydrates food list in tamil: உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவத்தை கொடுப்பது நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். உணவுகளிலிருந்து தான் வைட்டமின் சத்துக்கள், புரதம், தாதுக்கள், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைக்கிறது. இவற்றில் கார்போஹைட்ரேட் என்ற சத்தானது மேக்ரோ என்ற ஊட்டச்சத்து வகையாகும். கார்போஹைட்ரேட் சத்துதான் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. நமது உடல் எப்போதும் ஆரோக்கியாகவும், நல்ல வளர்ச்சி நிறைந்து இருப்பதற்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம்.
இந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் மக்களிடையே சில தவறான கருத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. உடல் எடை அதிகம், உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் என மக்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் உண்மையில் கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டை உடம்பானது உடைத்து குளுக்கோஸாக மாற்றுகிறது. இந்த குளுக்கோஸ் தான் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. அந்த வகையில் அதிக ஆற்றல் நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் |
குயினோவா:
கார்போஹைட்ரேட் உணவுகள்: ஒரு சத்தான தானிய வகையை சேர்ந்தது தான் இந்த குயினோவா. குயினோவில் 21.3% வரை கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குயினோவாவில் இதுமட்டுமல்லாமல் பல தாது சத்துக்களும் உள்ளன. உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். இதில் நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை காணப்படுவதால் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்.
ஓட்ஸ்:
அதிக கார்போஹைட்ரேட் உணவுகள்: ஓட்ஸில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. ஓட்ஸில் கார்போஹைட்ரேட்டானது 66% மற்றும் நார்ச்சத்துக்கள் 11% காணப்படுகிறது. ஓட்ஸில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான பீட்டா குளுக்கன் இருக்கிறது. இதய சம்மந்தமான நோய், உடலில் தேவையில்லாத கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது இந்த ஓட்ஸ். டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஓட்ஸை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
இனிப்பு உருளைக்கிழங்கு:
கார்போஹைட்ரேட்டானது 18-21% அளவில் இனிப்பு உருளைக்கிழங்கில் காணப்படுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கில் ஸ்டார்ச், சர்க்கரை மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் இருப்பதால் ஆக்ஸினேற்ற சேதத்தை குறைக்கிறது. உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குறைத்துவிடுகிறது.
வைட்டமின் ஏ உணவு வகைகள் |
பீட்ரூட்:
பீட்ரூட்டில் 8-10% அளவிற்கு கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. பீட்ரூட்டில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸினேற்றிகள் காணப்படுகிறது. பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கிறது. பீட்ரூட்டில் இருக்கக்கூடிய நைட்ரேட் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் செயல்திறனையும் அதிகரிக்க செய்கிறது.
ப்ளூபெர்ரி:
ப்ளூ பெர்ரியில் நீர் மற்றும் 14.5% கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ப்ளூ பெர்ரியில் வைட்டமின் சி சத்து, வைட்டமின் கே, மாங்கனீஸ் போன்ற பல விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்கள் ஆக்ஸினேற்ற சேதத்தில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். வயதாகிவிட்டாலே எல்லோருக்கும் ஞாபக திறன் குறைந்துவிடும். வயதானவர்களின் நினைவாற்றலைமேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது ப்ளூ பெர்ரி.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |