Carrot Side Effects
கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்து சாப்பிட்டாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்று தெரியும். இருந்தாலும் அதனை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது எத்தனை நபருக்கு தெரியும். கேரட் மட்டுமில்லை எந்த உணவாக இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடலி ல் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் ஒவ்வொரு உணவிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. இந்த பதிவில் கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் யாரெல்லாம் கேரட் சாப்பிட கூடாது என்று தெரிந்த கொள்வோம் வாங்க..
கேரட்டில் உள்ள சத்துக்கள்:

கேரட்டில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், பயோட்டின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மற்றும் வைட்டமின் பி6 வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட் தீமைகள்:
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அலர்ஜியை உண்டாக்கும்:
கேரட் மட்டும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். அதாவது அலர்ஜி, வீக்கம் மற்றும் கண்கள் மற்றும் மூக்கில் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.வாய்வு பிரச்சனை:

கேரட் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும், எனவே உங்களுக்கு ஏற்கனவே உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும்.
தோலின் நிறம் மாறும்:
கேரட்டை அதிகமாக சாப்பிடுவது கரோட்டினீமியா எனப்படும் பாதிப்பில்லாத நிலையை ஏற்படுத்தும். இது உங்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள அதிகப்படியான பீட்டா கரோட்டின் காரணமாக ஏற்படுகிறது, இது உங்கள் சருமத்தை ஆரஞ்சு நிறமாக மாற்றுகிறது.
சர்க்கரை நோய் பிரச்சனை:
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை உணவில் எடுத்து கொள்ள கூடாது. இதனை அதிகமாக எடுத்து கொள்வதன் மூலம் உங்களின் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.
பாலூட்டும் தாய்மார்கள்:

கேரட்டில் விட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைத்திருக்கிறது. அதற்காக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. இதை அதிகமாக எடுத்து கொள்வதன் மூலம் தாய்ப்பாலின் சுவையை மாற்றக்கூடும்.
சத்துக்குறைவு:
கேரட்டில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது நம்முடைய உடலில் சத்துக்களை குறைக்க செய்யும்.
திடீரென கேரட்டை நிறுத்தினால்:
நீங்கள் கேரட் மட்டுமில்லை எந்த உணவையும் திடீரென நிறுத்தினால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் கேரட்டை சாப்பிட கூடியவராக இருந்து, அதனை திடீரென நிறுத்தினால் தூக்கமின்மை, பதற்றம், மன எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கேரட்டை யாரெல்லாம் சாப்பிட கூடாது:
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் கேரட் சாப்பிட கூடாது, ஏனென்றால் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கொஞ்சம் கவனமாக சாப்பிட வேண்டும். ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் குழந்தைக்கு சேரும் என்பதால் கவனமாக சாப்பிட வேண்டும். கேரட் தாய்ப்பாலின் சுவையை மாற்ற வேண்டும்.
சிறிய குழந்தைகளுக்கு கேரட்டை அதிகமாக கொடுக்க கூடாது. முக்கியமாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கேரட்டை கொடுக்க கூடாது. இதன் மூலம் அவர்களுக்கு பக்க விளைவை ஏற்படுத்தலாம்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |














