முந்திரி அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நாம் தினமும் சாப்பிடும் முந்திரி பருப்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. முந்திரி பருப்பை ஊற வைத்தும் , வெறும் வாயிலும் ,இனிப்பு பண்டங்களிலும் , உணவு வகைகளிலும் அதிகம் பயன்படுத்துகிறோம். முந்திரி சாப்பிடுவது அதிக நன்மையை தந்தாலும் அது ஒரு சிலருக்கு தீங்கு விளைவிக்கத்தான் செய்கிறது. முந்திரியில் வைட்டமின், தாதுக்கள்,அதிக கலோரிகள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட், நார்ச்சத்துக்கள் இருப்பதால் அது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், முந்திரி அதிக நன்மைகளைஅளிக்கிறது என்றாலும், அதை சாப்பிடும் போது சிலருக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் அளிக்கிறது. முந்திரியில் பைடிக் அமிலம் அதிகம் இருப்பதால் முந்திரியை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு செரிமான பிரச்சனைகள், மலசிக்கல் , அஜீரண கோளாறு, வாய்வு பிரச்சனைகள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை ஏற்படும். இதில் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.இன்றைய பதிவில் முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்க்கலாம் வாங்க…
செரிமான பிரச்சனை :

முந்திரியில் இருக்கும் பைடிக் அமிலம் உடலில் இருக்கும் ஊட்டசத்துக்கள் உறிஞ்சிவதை தடுக்கிறது. இது சிலருக்கு மலச்சிக்கல், வாய்வு மற்றும் அஜீரண கோளாறு போன்றவை ஏற்படுத்தும்.
அதிக எடை:

முந்திரியில் கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்க கூடும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வாமை :

முந்திரியில் அதிக கலோரிகள் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் முந்திரியை அதிகம் சாப்பிட்டால் தோலில் படை அரிப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.
சர்க்கரை பிரச்சனை :

முந்திரியில் இயற்கையாகவே இனிப்பு சுவையை கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். சர்க்கரை பிரச்சனை இருப்பவர்கள் முந்திரி அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
புற்றுநோய் :

முந்திரியில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்தாலும் முந்திரியில் இருக்கும் அதிக கொழுப்பு சத்துக்கள் ரத்த நலத்திற்கு சென்று புற்றுநோயை உண்டாக்கும்.
தோலில் படை மற்றும் அரிப்பு:

உடம்பில் சரும பிரச்சனை இருப்பவர்கள் முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முந்திரியில் அதிக நச்சுத்தன்மை இருக்கும் என்பதால் முந்திரியை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அரிப்பு மற்றும் படை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
தலைவலி :

முந்திரியில் ஃபைனிலெதிலமைன் டைரமைன் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகமாக இருப்பதால் தலைவலி பிரச்சனை உண்டாக்கும்.மேலும், ஏற்கனவே தலைவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிக தலைவலி பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறுநீரக கற்கள்:

முந்திரியில் அதிகமாக ஆக்சலேட் உப்புகள் இருக்கிறது . முந்திரியில் உறிஞ்சப்படாத கால்சியம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கலை உருவாக்குகிறது. ஆகையால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முந்திரி பருப்பின் ஊட்டச்சத்து:
|
ஊட்டச்சத்து |
கிராம்கள் |
|
கார்போஹைட்ரேட்டுகள் |
8.56 |
|
நார்சத்து |
0.94 |
|
புரதம் |
05.16 |
|
மொத்த கொழுப்பு |
12.04 |
|
கால்சியம் |
10.05 |
|
இரும்பு |
01.89 |
|
மெக்னீசியம் |
82.08 |
|
பாஸ்பரஸ் |
168 |
|
பொட்டாஷியம் |
187 |
|
சோடியம் |
03.04 |
|
வைட்டமின் சி |
0.14 |
|
தியாமின் |
0.12 |
|
நியாசின் |
0.30 |
|
வைட்டமின் B6 |
0.12 |
|
வைட்டமின் ஈ |
0.26 |
|
வைட்டமின் கே |
09.67 |
|
துத்தநாகம் |
1.64 |
|
செலினியம் |
05.64 |
முந்திரியை யாரெல்லாம் சாப்பிட கூடாது:
முந்திரியை ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், பித்தப்பையில் கற்கள் உள்ளவற்கள்,மலசிக்கல், அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் , உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்திரி பருப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
| நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














