முந்திரி பருப்பு பயன்கள் | Health Benefits Of Cashew Nuts In Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கியம் சார்ந்த பகுதியில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். நீண்ட காலத்திற்கு எந்த நோயும் நம்மை தாக்காமல் இருக்க சத்தான உணவுகளை நாம் எடுத்துக்கொள்வது அவசியம். பருப்பு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. பாயாசம், கேசரி, பொங்கல் என்றாலே நறுமணத்திற்கு நாம் முதலில் சேர்ப்பது இந்த முந்திரி பருப்பை தான். அந்த வகையில் நாம் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று கீழே காண்போம்..
இதய நோய் வராமல் தடுக்க:
முந்திரி பருப்பில் நல்ல கொழுப்புகள் அதிகமாக நிறைந்துள்ளது. முந்திரி பருப்பு சாப்பிடுவதால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புக்களை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது. கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மக்கள் அனைவரும் உடலுக்கு கெடுதல் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. உடலுக்கு கொழுப்பு சத்தானது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதய சம்மந்தமான நோயிலிருந்து தப்பிக்க முந்திரி பருப்பு சாப்பிடலாம்.
செரிமான கோளாறு நீங்க:
ஒரு சிலருக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்ட பிறகு செரிமான சம்மந்தமான பிரச்சனைகள் வரும். இது மாதிரியான செரிமான கோளாறுகளை உடனடியாக குணப்படுத்துகிறது இந்த முந்திரி பருப்பு. செரிமான கோளாறுகள் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனை, வயிற்று வலி மற்றும் வயிற்று சம்மந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது முந்திரி. அடிக்கடி செரிமான கோளாறுகளை சந்திப்பவர்கள் முந்திரி பருப்பை அதிகமாக சாப்பிட்டு வரலாம்.
நரம்பு பலம் பெற:
கால்சியம் மற்றும் மக்னீசியம் என்ற தாது சத்துக்கள் நரம்புகளுக்கு மட்டுமல்லாமல் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நாளிற்கு நம்முடைய உடலுக்கு 300-750 கிராம் மக்னீசியம் சத்தானது அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவியாக இருக்கிறது. முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் மற்றும் நரம்பு பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டோடு வைக்க:
முந்திரி பருப்பில் சோடியம் அளவானது குறைந்த அளவிலும், பொட்டாசியம் அளவானது அதிகமாக இருப்பதால் உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுப்பாட்டோடு வைக்கிறது. உடலில் இரத்த அழுத்தமானது சரியான முறையில் இருக்க தினமும் முந்திரி பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை பயன்கள் |
புற்றுநோய் குணமாக:
ஆண்களுக்கு நிகராக இப்போது பெண்களும் பாதிக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று இந்த புற்றுநோய். முந்திரி பருப்பில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இது உடலில் புற்றுநோய்களின் செல்களை வளரவிடாமல் தடுத்து நிறுத்தி புற்றுநோய் வராமல் நம் உடலை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |