விளக்கெண்ணெய் மருத்துவ பயன்கள்..! Castor Oil Benefits in Tamil..!

விளக்கெண்ணெய் பயன்கள்

விளக்கெண்ணெய் மருத்துவ பயன்கள்..! Castor Oil Benefits in Tamil..!

விளக்கெண்ணெய் பயன்கள்: வணக்கம் இன்று நாம் விளக்கெண்ணையை தினமும் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் நிகழும் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.. உண்மையில் ஆமணக்கு என்னும் விதையில் இருந்து தயாரிக்கப்படும் விளக்கெண்ணெய், பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்து விளங்குகிறது. இந்த விளக்கெண்ணெய் மற்ற எண்ணெய்களை போல இல்லாமல், அடர்த்தி அதிகமாகவும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

சரி வாங்க விளக்கெண்ணெய் மருத்துவ பயன்களை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

விளக்கெண்ணெய் மருத்துவம்:-

விளக்கெண்ணெய் மருத்துவம்: 1

Castor Oil Benefits in Tamil:- பொதுவாக விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டதால் உடல், கண், மூக்கு, செவி, வாய் இவைகளில் உண்டாகும் எரிச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

மேலும் இந்த விளக்கெண்ணையை குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிற்றை சுத்தம் செய்வதற்கு கொடுக்கப்படும் ஒரு சிறந்த மருந்தாகும்.

விளக்கெண்ணெய் பயன்கள்: 2

Castor Oil Benefits in Tamil:- சிலருக்கு எப்பொழுதும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த பிரச்சனைக்கு என்னதான் நவீன மருந்துகள் எடுத்து கொண்டாலும். அவையெல்லாம் வேறு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள், விளக்கெண்ணையின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபமாக மலம் கழிக்க உதவும். ஆனால் இந்த முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. மேலும் விளக்கெண்ணெய் பேதியை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

ஆளி விதை மருத்துவ குணங்கள்..!

விளக்கெண்ணெய் பயன்கள்: 3

Castor Oil Benefits in Tamil:- தோல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளுக்கு விளக்கெண்ணெய் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

எனவே விளக்கெண்ணெயில் சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் தோல் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்.

நாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

விளக்கெண்ணெய் பயன்கள்: 4

Castor Oil Benefits in Tamil:- அனைவருக்குமே தலைமுடி நன்றாக, ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

எனவே தேங்காய் எண்ணெயில் சில துளிகள் விளக்கெண்ணையை கலந்து, தலை முடிக்கு தேய்த்து வந்தால் நரைமுடி கருமையாகும், தலை முடி உதிர்வு நீங்கி, தலை முடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.

விளக்கெண்ணெய் பயன்கள்: 5

Castor Oil Benefits in Tamil:- கண்களின் ஆரோக்கியத்தை காக்க விளக்கெண்ணெய் மிக சிறந்த ஒன்று. இப்போது எல்லாம் பெரும்பாலானவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது.

இது எதிர்காலத்தில் கண்பார்வையை பாதிக்கிறது. எனவே தினமும் இரவில் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும்.

விளக்கெண்ணெய் பயன்கள்: 6

Castor Oil Benefits in Tamil:- உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்பு அதிகம் ஏற்படும். இப்படி பட்ட நபர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணையின் சில துளிகள் உங்க பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் பயன்கள்: 7

vilakennai payangal:- வயதானாலே அனைவருக்கும் மூட்டு வலி பிரச்சனையை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இந்த மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இரவு தூங்குவதற்கு முன் உடலில் அனைத்து மூட்டுகளிலும் தடவுங்கள், இவ்வாறு செய்வதினால் இந்த மூட்டு வலி பிரச்சனை குணமாகும்.

மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips