சப்பாத்தி சாப்பிடுவதினால் உடல் எடை குறையுமா? குறையாதா? | Chapati Weight Loss in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பலருக்கு பிக்கவும் பிடித்த உணவுகளில் சப்பாத்தியும் இடம் பெறுகிறது. வீட்டில் எதுவும் இல்லாத நேரங்களில் சப்பாத்தியை மிகவும் ஈஸியாக செய்து சாப்பிட்டுவிடலாம். பல வீடுகளில் இந்த சப்பாத்தி தான் டின்னர் என்றுகூட சொல்லலாம். சப்பாத்தி ரொட்டி வகையை சார்ந்தது. மருத்துவர்களிடம் சென்றால் கூட உணவில் சப்பாத்தியை மட்டும் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.
ஏன் அப்படின்னா நம் உடலுக்கு தேவையான வைட்டமின் B, E, மினரல், ஜிங்க், காப்பர், அயோடின், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் சப்பாத்தி செய்யக்கூடிய கோதுமை மாவில் உள்ளது. இவ்வளவு நன்மைகள் அடங்கிய இந்த சப்பாத்தியை நாம் தினமும் நமது உணவில் எடுத்துக்கொள்வது நல்லது தான். இருந்தாலும் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் கூறுகின்றன அது உண்மையா என்பதையும், மற்றும் சப்பாத்தி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றில் இந்த தொகுப்பில் நாம் தெளிவாக படித்தறியலாம் வாங்க.
சப்பாத்தி சாப்பிடுவதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
தினமும் நமது அன்றாட உணவுகளில் சப்பாத்தியை சேர்த்து கொள்வதினால் நமது சருமம் எப்பொழுது பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கோதுமையில் அதிகளவு இரும்புச்சத்து இருக்கிறது என்பதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
டயட்டுக்கு மிக சிறந்த உணவு எது என்றால் கண்டிப்பாக சப்பாத்தியை தான் சொல்ல வேண்டும். ஆம் பிரண்ட்ஸ் டயட் பாலோ செய்பவர்கள் சப்பாத்தியை மட்டும் உணவாக எடுத்துக்கொள்ளும் போது உங்கள் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் இரத்த கொதிப்பு உள்ளவராகில் சப்பாத்தியை எடுத்துக்கொள்வதன் மூலம் அத்தகைய பிரச்சனையை கண்ரோல் செய்வதற்கும் சப்பாத்தியை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் நோயெதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியமான ஒன்று ஆக சப்பாத்தியை சாப்பிடுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
சப்பாத்தி சாப்பிடுவதால் அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றது. ஆக அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
மேலும் சப்பாத்தி சாப்பிடுவதினால் மன்னரின் மூளைக்கு செயல் திறன் அதிகரிக்கப்படுகிறது என்று சொல்ல படுகிறது.
சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
தினமு சப்பாத்தி சாப்பிடுவதினால் கண்டிப்பாக உடல் எடை குறையாது. ஆனால் உங்கள் உடல் எடையை கச்சிதகமாக வைத்துக்கொள்ளலாம். அதாவது மற்ற உணவுகளில் உள்ள கலோரிகளைவிட சாப்பதில் குறைந்த அளவிலான கலோரிகள் மட்டும் தான் இருக்கிறது. ஆக உங்கள் உடல் எடையை மிகவும் Fit-ஆக வைத்துக்கொள்ளலாம்.
ஆக நீங்கள் சப்பாத்தியை விரும்பி சாப்பிட்டாலும் சரி, இல்ல பிடிக்காமல் சாப்பிட்டாலும் சரி அது பலவகையான நன்மைகளை மட்டும் தான் அளிக்கிறது. ஆக உங்களது உணவு முறையில் தினமும் ஒரு வேளையாவது சப்பாத்தியை சாப்பிடுங்கள் நன்றி வணக்கம்..
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |