Chewing Gum Side Effects
தினமும் எங்கள் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. பூமர் அதாவது சூயிங் கம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சரி நீங்கள் அதிகமாக சூயிங் கம் சாப்பிடுவீர்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் |
Chewing Gum in Tamil:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் பல்வேறு வடிவங்களில் சூயிங் கம் செய்து வருகின்றனர். முந்தைய காலங்களில் இந்த சூயிங் கம் சில மரங்களின் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டன. ஆனால் இன்றைய நிலையில் பெரும்பாலான நவீன சூயிங் கம்கள் செயற்கை ரப்பர்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
சூயிங் கம் என்பது ஒரு மென்மையான, ஒருங்கிணைந்த பொருளாகும். இது விழுங்கப்படாமல் மெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தீமை என்று தெரிந்தும் பலரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சூயிங் கம் சாப்பிடுகிறார்கள். அதனால் பல தீமைகள் ஏற்படுகிறது.
பல் வலி பிரச்சனைகள் இரண்டே நிமிடத்தில் குணமாக இதை செய்து பாருங்கள்.! |
Chewing Gum Side Effects in Tamil:
பற்கள் சிதைவு:
நாம் சூயிங் கம்களை அடிக்கடி மென்று சாப்பிடுவதால், பல் சொத்தை, துவாரங்கள் மற்றும் ஈறு நோய் போன்ற பல் ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. சூயிங் கம்மில் இருந்து வரும் சர்க்கரை உங்கள் பற்களின் ஈறுகளை படிப்படியாக சேதப்படுத்துகிறது. இதனால் சிறுவயதிலேயே பற்கள் விழுவதற்கு கூட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
மேலும் நீங்கள் இதனால் வாயை அதிகமாக அசைப்பதால் உங்கள் தாடை தசைகள் வலுவிழந்து போகின்றன. மேலும் தாடையில் TMJ ஏற்படுத்துகிறது. TMJ என்பது தாடையில் ஏற்படும் ஒருவிதமான வலி ஆகும்.
குறிப்பாக நீங்கள் வாயின் ஒரு பக்கத்தை மட்டும் அதிகமாக அசைப்பதால் தாடையில் இருக்கும் தசைநார்களை பலவீனப்படுத்துகிறது. இதனால் நாளடைவில் காதுவலி, பல்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பல் வலி & பல் சொத்தை பாட்டி வைத்தியம்..! |
வயிற்றில் பாதிப்பு ஏற்படுகிறது..?
நாம் அதிகமாக சூயிங் கம் சாப்பிடுவதால் நம் வயிற்றில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சூயிங் கம் இரைப்பையில் பல குடல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இதனால் தசைப்பிடிப்பு, வயிற்று வலி மற்றும் அசாதாரண குடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சூயிங் கம் மெல்லும்போது அதிகப்படியான காற்றை நாம் விழுங்குகின்றோம். இது குடலில் வீக்கம் மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கிறது.
சூயிங் கம்மில் உள்ள செயற்கை இனிப்புகளான மன்னிடோல் மற்றும் சோர்பிடால் போன்றவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |