உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்? Chia Seed Benefits in Tamil
பொதுவாக ஒவ்வொரு பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள விதைகள் பலவிதமான மருத்துவ குணங்களை அள்ளித்தருகின்றது. இருப்பினும் அவற்றில் மருத்துவ பயன்களை நாம் அறிந்திடாமலேயே நாம் அதனை பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் நாம் சியா விதைகளை கூறலாம். சியா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் இந்த சியா விதை செய்து வருகின்றது. பூமியில் விளையக்கூடிய விதைகளிலேயே சியா விதையில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய சியா விதைகளை நாம் தொடர்ந்து உட்கொள்வதினால் நம் உடலில் ஏற்படும் அற்புத நன்மைகளை பற்றி இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.
கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..! |
சியா விதை என்றால் என்ன?
சால்வியா என்னும் தாவரத்தின் கருப்பு நிற விதைதான் இந்த சியா விதைகள் என்று அழைக்கப்படுகிறது. இது புதினா குடும்பத்தை சார்ந்தது. இந்த சியா விதைகளை பழகாலங்களிலிருந்தே பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஒரு ஸ்பூன் இந்த சியா விதைகளை சாப்பிட்டு வந்தாலே போதும் அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு நல்ல ஆற்றலை தரும் இந்த சியா விதைகள்.
சியா விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
இந்த சியா விதைகளை முழு ஊட்டச்சத்து நிறைந்த விதை என்று சொல்லலாம். 28 கிராம் சியா விதையில் உள்ள ஊட்டச்சத்திகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஃபைபர் – 11 கிராம், புரோட்டீன் – 4 கிராம், கொழுப்பு சத்து – 9 கிராம், கால்சியம் – 18%, மாங்கனீஸ் – 30%, பாஸ்பரஸ் 27% அடங்கியுள்ளது. இதை தவிர 22 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இதை தவிர துத்தநாகம், நியாசின், பொட்டாசியம், தையமின் மற்றும் விட்டமின் பி2 போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது இந்த 28 கிராம் எடையுள்ள சியா விதைகள்.
மேலும் இந்த சியா விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
சியா விதை மருத்துவ பயன்கள் – chia seeds benefits in tamil
தொப்பை குறைய
தொப்பை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் சியா விதைகளை சாப்பிட்டு வரலாம். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் தொப்பையை குறைக்க உதவுகின்றது. மேலும் இவற்றில் உள்ள பண்புகள் சீக்கிரம் வயிறு நிரம்பிய ஒரு உணர்வை ஏற்படுத்தும். இதனால் பசியை கட்டுப்படுத்துகிறது, இதனால் உடல் எடையும் மிக விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
மேலும் இந்த சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் உடலில் வளர்ச்சிதை மாற்றங்களை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்க:-
chia seeds benefits in tamil – சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அழித்து இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது. எனவே மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மாரடைப்பு வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த சியா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
ஆப்ரிகாட் பழம் பயன்கள்..! |
பற்களின் ஆரோக்கியத்திற்கு:-
சியா விதைகள் நன்மைகள் – இந்த சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என்பதால் தொடர்ந்து ஒரு ஸ்பூன் சியா விதைகளை சாப்பிட்டு வர பற்களை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்கலாம். மேலும் இவற்றில் உள்ள துத்தநாகம் பற்களில் படிந்திருக்கும் கறைகளை அகற்றி, பற்களை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். அதேபோல் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளையும் அழித்து போராடும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளும்:-
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தினமும் உணவில் சியா விதைகளை சேர்த்து கொள்வது மிகவும் நன்று. ஏனென்றால் சியா விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சர்க்கரையின் அளவையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
சியா விதைகள் பயன்கள்
தினமும் உணவில் நாம் சியா விதைகளை சேர்த்து கொள்வதினால் உடலுக்கு புத்துணர் கிடைக்கும், உடலில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி, கை கால் வலி போன்றவை குணமாகும், உடல் எடை குறையும், செரிமான திறன் அதிகரிக்கும்.
சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்?
இந்த சியா விதைகளை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்து சாப்பிடலாம். அல்லது வறுத்து பேஸ்டு போல் அரைத்து சமைத்து சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |