தேங்காய் பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of Coconut Milk in Tamil
தேங்காய் பால் ஒரு சிலருக்கு புடிக்கும், ஒரு சிலருக்கு புடிக்காது. ஆனால் தேங்காய் பாலில் அவ்வளவு ஒரு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய அற்புத குணங்கள் நிறைந்துள்ள தேங்காய் பாலின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
டிராகன் பழம் நன்மைகள் |
உடல் உறுப்புகள் சுத்தமாக:
நாள் முழுவதும் உணவுகள் ஏதும் சாப்பிடாமல் மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேங்காய் பாலை மட்டும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் உறுப்புகள் அனைத்தும் சுத்தமாகும்.
நீரிழிவு நோய் குணமாக:
நீரிழிவு நோய் உடலில் எதனால் வருகிறது என்றால் உடலில் மாங்கனீசு என்கிற சத்து குறைபாட்டினால் வருகிறது. நமது உடலில் மாங்கனீசு சத்து அதிகரிக்க தேங்காய் பாலை குடித்து வரலாம். ஏனென்றால் தேங்காய் பாலில் அதிகமாக மாங்கனீசு சத்து நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.
தோல் சுருக்கம் மறைய:
சிலருக்கு இளம் வயதிலையே தோல் சுருக்கம் அடைந்து பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்க மாட்டார்கள். அதற்கு நீங்கள் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. சரும தோல்கள் சீக்கிரத்தில் சுருக்கம் கொடுக்காமல் இருப்பதற்கு அடிக்கடி தேங்காய் பால் குடித்து வரலாம். தேங்காய் பால் தோலில் உள்ள பளபளப்பு தன்மை அதிகரித்து வயதான காலத்திலும் இளமை தோற்றம் நீடிக்கும்.
தேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள் |
எலும்பு பலம் பெற:
உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு முதலில் பாஸ்பரஸ் என்ற ஊட்டச்சத்து மிகவும் தேவை. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் சத்து இல்லாவிட்டாலும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு முறிவுகளை தடுத்துவிடும்.
கீல்வாத நோய் சரியாக:
தேங்காய் பாலில் செலினியம் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக உள்ளது. கீல்வாத பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் தேங்காய் பாலை குடித்து வர கீல்வாத நோய் விரைவில் குணமாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |