Coffee Side Effects In Tamil
காலையில் எழுந்தவுடன் அனைவரும் காபி அல்லது டீ குடித்துவிட்டு தான் தங்கள் அன்றாட வேலைகளையே ஆரம்பிக்குறார்கள். காபி மற்றும் டீ விரும்புபவர்கள் காலை மாலை மட்டுமில்லாமல் எந்த நேரம் ஆனாலும் காபி குடிக்கிறார்கள். இப்படி அவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து காபி வரை பருகுகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு காபி மட்டும் தான் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தினமும் இரண்டு வேளைக்கு மேல் அதிகமாக காபி உட்கொள்ளும் போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
காஃபின் என்றால் என்ன?
காஃபின் என்பது காபி பீன்ஸ், தேயிலை இலைகள் மற்றும் கோகோ காய்கள் போன்ற தாவரங்களில் இயற்கையாக காணப்படும் ஒரு கசப்பான பொருளாகும். இது மருந்துகள், பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் காஃபி போன்றவற்றில் பரவலாக காணப்படுகிறது.
மத்திய நரம்பு மண்டலம், தசைகள், இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மையங்களை தூண்டுவதன் மூலம் காஃபின் செயல்படுகிறது. காஃபின் உட்கொள்வதில் நன்மைகளும் உள்ளன அதேசமயத்தில் தீமைகளும் உள்ளன.
காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
- ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் காபி குடிக்கும் பொழுது இதயப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- மருத்துவர்கள் காபியில் அதிக பால் சேர்க்க வேண்டாம் என்றும் கர்ப்பிணி பெண்கள் காபியின் அளவை குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
- நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், தியோபிலின், பினோதியாசின்கள், ஆன்டிகோகுலண்ட் மருந்துகள்,டிரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ், ஆஸ்துமா மருந்துகள், கருத்தடை மருந்துகள் போன்ற மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் காபியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமிற்கு மேல் காபி உட்கொள்ளும் போது உடல் நடுக்கம் ஏற்படும்.
- காலை வெறும் வயிற்றில் காபி உட்கொள்ளும் போது ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
- மன அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் காபி குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- காபி அதிகமாக உட்கொள்ளும் நபர்களுக்கு பதட்டம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- காபியின் அளவு அதிகாமாகும் பொழுது உங்களுக்கு தூக்கமின்மை ஏற்படும். இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாமல் உடல் சோர்வை ஏற்படுத்தும்.
- காபியை அதிகமாக உட்கொள்வது ராபடோமயோலிசிஸ் என்ற நிலைக்கு வழிவகுக்கும். இது சேதமடைந்த தசையில் முறிவை ஏற்படுத்தும். இந்த சேதமடைந்த தசைகள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- காபி குடிப்பது 18 முதல் 45 வயதினரிடையே உயர் இரத்த அழுத்தத்துடன் கூடிய மாரடைப்பு போன்ற இருதய நோயை உண்டாக்குகிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்த தமனிகளை அடைத்து மூளை மற்றும் இதயத்திற்கு இரத்தம் பாய்வதை தடுக்கிறது.
- காபி அதிகம் உட்கொள்ளும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வழி வகுக்கும். வயதானவர்களில் இது பருமனை ஏற்படுத்தும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |