Cold Water Bath Vs Hot Water Bath in Tamil
குளியல் என்பது நமது அன்றாட வாழக்கையில் மிகவும் முக்கியமானது. அதாவது ஒரு நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதிலிருந்து நாளின் இறுதியில் நமது சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சி அளிப்பது வரை அனைத்திற்கும் குளியல் என்பது முக்கியமானது. ஏன் ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் குளித்து விட்டு தூங்கினால் தான் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
ஆனால் பலகாலமாக குளிப்பதில் உள்ள சந்தேகம் என்னவென்றால் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? அல்லது சூடான நீரில் குளிப்பது நல்லதா? என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை இன்றைய பதிவில் காணலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தினமும் குளிப்பதில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா இத்தனை நாள் தெரியாமே போச்சே
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு காலை நேரத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு உதவியாய் இருக்கிறது. மேலும் இதில் குளிப்பதால் தூக்க கலக்கத்தையும், சோம்பலையும் போக்கும்.
குளிர்ந்த நீரில் குளிப்பதால் உங்களின் மனஅழுத்தம் குறைவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அதேபோல் நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஆண்மையை அதிகரிக்கும் என்று மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகரிக்கிறது.
இதனால் உங்கள் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கிறது.
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் தீமைகள்:
நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது சளி, காய்ச்சல் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், குளிர்ந்த நீர் குளியல் உங்களுக்கு ஏற்றதாக இருக்காது.
ஏனெனில் குளிர்ந்த நீர் குளியல் இதுபோன்ற அறிகுறிகளை மோசமாக்கும். சில ஆய்வுகள் குளிர்ந்த நீரில் குளிப்பது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?
சூடான நீரில் குளிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
சூடான நீர் உங்கள் உடலை சுத்தப்படுத்தும் அற்புத பொருளாகும். இதன் வெப்பநிலை உடலில் உள்ள கிருமிகளை அழிக்க உதவும். இதனால் சூடான நீரில் குளிப்பது உங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத்தையும் மேம்படுத்தும்.
சூடான நீரில் குளிப்பதால் சளி மற்றும் இருமல் நீங்கும். அதாவது இதன் நீராவி உங்கள் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்வதோடு மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய உதவுகிறது.
மேலும் இதில் குளிப்பதால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இன்சொமேனியாவை போக்க உதவுகிறது. மேலும் உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை நீக்க கூடியது.
அதுமட்டுமின்றி தசைகளில் உள்ள வலியை குணப்படுத்த உதவுகிறது. மேலும் சில ஆய்வுகளின் படி சூடான நீரில் குளிப்பது சர்க்கரை நோய் உள்ளவர்களின் சர்க்கரை அளவை குறைப்பதாக கூறப்படுகிறது.
சூடான நீரில் குளிப்பதால் கிடைக்கும் தீமைகள்:
உங்கள் சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்களை தக்கவைக்க உதவும் செபம் லேயரை போன்றவை சூடான நீரில் குளிப்பதால் சேதமடைகின்றன.
இதனால் செல்கள் ஈரப்பதத்தை குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போவது, எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சூடான நீரில் குளிப்பதால் இரத்த அழுத்தத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
எந்த நீரில் குளித்தாலும் உங்களின் உடல் நிலையை பொறுத்து நன்மைகளும் தீமைகளும் வேறுபடும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதில் நல்லது இருக்கா..! இதுபோல் நிறைய பழக்கம் நல்லதே அளிக்கிறது
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |