வாக்கிங் போகும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

Advertisement

Common Mistakes Should Avoid While Walking In Tamil

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். காலை மாலை இரு வேலையும் நடைப்பயிற்சி செய்வது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் எந்தவித உடல்நல பாதிப்புகளும் ஏற்படாது. இதய பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவர்கள் உடைலை நோய்களில் இருந்து விடுவித்து தேக ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்.

நடைப்பயிற்சி செய்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே பண்ணிடாதீங்க. நடைப்பயிற்சி நம் உடல் எடையையும் குறைக்கும் என்பதால் நடைப்பயிற்சி செய்பவர்கள் சரியான முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நடைப்பயிற்சியின் போது செய்யக்கூடாத தவறுகளை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

Walking Style Personality in Tamil

நடைப்பயிற்சியின் போது செய்ய கூடாத தவறுகள்:

வேகமான நடை:

நடைப்பயிற்சியில் போது வேகமாக நடப்பவர்கள் அதிகபட்சம் நிமிடத்துக்கு 100 படிகள் (steps) வரை இருக்கலாம். நீங்கள் இதை விட அதிகமாக நடப்பவர்களாக இருந்தால், நீங்கள் செய்வது தவறு. மேலும் இது உங்கள் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கைகளை அசையாமல் வைத்திருப்பது:

நடைபயிற்சியின் போது கைகளை அசையாமல் வைத்திருப்பது தவறு. கால் இயக்கத்தை சமநிலைப்படுத்த கைகளை நகர்த்துவது இயற்கையானது. ஆனால் கைகள் விறைப்பாக நேராக பக்கவாட்டில் வைத்திருந்தால் அது உங்கள் நடையை மெதுவாக்கும். கைகளை அசைக்கும் போது முழங்கைளை 90 டிகிரியில் வளைத்து கைகளை தளர்த்தி வைத்தால் போதும்.

இடுப்பை அசைப்பது:

நீங்கள் நடக்கும் போது இடுப்பை இருபக்கமும் சுழற்றுவது மிகவும் தவறான செயல் ஆகும். இதுவே நீங்கள் ஜாகிங் செய்யும் போது இடுப்பை சுழற்றினால் அது சரி. ஆனால் நடைபயிற்சியின் போது இதை செய்ய முடியாது. நீங்கள் இடுப்பை சுழற்றி நடந்தால் இது சிறப்பாக விளைவுகளை ஏற்படுத்தும்.

தோள்பட்டை நிலை:

தோள்பட்டை கீழ் நோக்கி பார்த்தால் உங்கள் தோள் பதட்டமாக அல்லது முன்னோக்கியபடி சாய்த்துவைக்க கூடாது. இது உங்கள் கழுத்து, இடுப்பு முதுகு மற்றும் தோள்களில் பதற்றத்தை உண்டு செய்யும். மாறாக தோள் பட்டை தளர்வாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் கழுத்து இதனால் அசெளகரியத்தை எதிர்கொள்ள கூடாது . நடைபயிற்சி நேரத்தில் இது முன்னோக்கி இருக்க வேண்டும். தோள்பட்டையை அதன் போக்கில் விடாமல் இறுக்க பற்றி இருப்பது அந்த இடத்தில் வலியை உண்டாக்கலாம்.

முதுகை வளைக்க வேண்டாம்:

நடக்கும் போது முதுகை நேராக வைத்திருக்க வேண்டும். முதுகுத்தணடை வளைப்பதற்கு பதிலாக நேராக நீட்டிப்பதில் கவனம் செலுத்துங்கள். கடக்கும்போது முதுகை நேராக வைத்திருப்பது தான் உங்களுக்கு நல்லது. இல்லையெனில் இது உங்களுக்கு முதுகு வலியை ஏற்படுத்தும். மேலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

கால்களின் இயக்கம்:

நடக்கும் போது கால்களின் இயக்கம் மிக முக்கியமானது. விறுவிறுப்பாக நடக்கும் போது கால் விரல்களை தரையில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும். அதே போன்று கால்களை முன்னோக்கி உயர்த்தி வைக்க வேண்டும். கால்களை உயர வைத்து தொடையை வளைத்தாற்போன்று எடுத்து வைக்க வேண்டும்.இல்லையெனில் கால் வலியை மூட்டு வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்களுக்கு தெரியுமா நடைப்பயிற்சி எவ்வளோ நன்மை என்று..! Walking Benefits in Tamil

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement