கொத்தமல்லி தீமைகள்..! – Coriander Leaves Side Effects in Tamil
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக அனைவரும் காய்கறி கடைக்கு செல்வோம்..! அங்கு அனைவரும் காய் வாங்கும் போது இலவசமாக கொத்தமல்லி, கருவேப்பிலை கொடுப்பது வழக்கம். இதனை மட்டும் இலவசமாக கொடுக்க காரணம் என்ன தெரியுமா..? அதேபோல் முக்கியமாக சொல்ல போனால் இது இல்லாமல் எந்த ஒரு உணவையும் சமைப்பது இல்லை.
இந்த கொத்தமல்லி இல்லாமல் சமைக்க முடியாத உணவுகள் என்றால் அது தான் பிரியாணி. பிரியாணியில் கொத்தமல்லி இல்லாமல் பிரியாணி செய்தால் அது அந்த அளவிற்கு டேஸ்ட் இருக்காது. எனவே கொத்தமல்லி இன்றியமையாத பொருளாக உள்ளது..! இதில் இருக்கும் நன்மைகள் நம் அனைவருக்கும் தெரியும்..! ஆனால் நமக்கு அதில் இருக்கும் தீமைகளை பற்றி யாருக்கும் தெரியாது.
கொத்தமல்லி இலை தீமைகள்:

கொத்தமல்லியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதேபோல் இதில் இருக்கும் சத்துக்கள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி என இதில் எல்லா வைட்டமின் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கொத்தமல்லி இலைகளில் 11 அத்தியாவசிய எண்ணெய்கள் காணப்படுகிறது.அதேபோல் இதனை உட்கொள்வதால் நமக்கு என்ன நன்மைகள் உள்ளது என்று பார்க்கலாம். வயிறு பிரச்சனை, மூக்கில் இரத்தம் வருவதை தடுக்கும். சரும பிரச்சனை, கர்ப்பிணி பெண்கள் வாந்தி குறைய, வாய்ப்புண் குணமாக என்று இதுபோன்ற நிறைய சத்துக்கள் அதில் நிறைந்துள்ளது.
Coriander Leaves Side Effects in Tamil:
கொத்தமல்லி இலைகள் ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. அதாவது ஒவ்வொமை பிரச்சனை ஏற்படும். அதேபோல் ஏப்பம் அதிகமாக வரும். எதிர்வினை பண்புகள் ஏற்படும். இது மாதிரி பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கு ஏற்றது போல் அறிவுரை பெற்று கொள்ளவும். இது அனைவருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது.
கொத்தமல்லி இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். இரைப்பை அல்லது குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கருவேப்பிலையில் இருக்கும் தீமை பற்றி உங்களுக்கு தெரியுமா
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |













