இது மட்டும் தெரிந்தால் நீங்க Earbuds யூஸ் பண்ண மாட்டிங்க..

Advertisement

Cotton Buds Side Effects in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நாம் நம்முடைய நகத்தை எப்படி வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து நகத்தை கட் செய்வோம். அது போல தான் காதுகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை சுத்தம் செய்வதற்கு சில நபர்கள் ஊக்கு, சில நபர்கள் கோழி இறகு, இன்னும் சில நபர்கள் Ear buds பயன்படுத்துவார்கள். அதனால் இந்த பதிவில் Ear buds பயன்படுத்துவதினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

Cotton Buds Side Effects in Tamil:

Cotton Buds Side Effects in Tamil

காது அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது:

காதுகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு Ear buds பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம். ஆனால் Ear buds பயன்படுத்தும் போது நடுப்பகுதியில் இருக்கும் அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது. இதனால் அழுக்குகள் சேர்ந்து காது அடைப்பை ஏற்படுத்தும்.

காதில் நீர் கோர்த்தல் குணமாக என்ன செய்வது?

காதின் ஆரோக்கியத்தை பாதிக்கும்:

காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும். 

காதுகளில் காயம்:

காதுகளில் அடிக்கடி Ear buds பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும் காதின் செவி தன்மையை பாதித்து காது கேட்காமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

உணவின் சுவையை அறிய முடியாது:

நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அறிவதற்கு காதுகளின் நடுப்பகுதியில் ஒரு நரம்பு செல்கிறது. இதில் நீங்கள் Ear budsபயன்படுத்தும் போது இந்த நரம்பினை பாதித்தால் உணவின் சுவையை அறிய முடியாது.

ear buds பயன்படுத்துவதினால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது தெரிந்து கொண்டீர்கள். அதனால் அடிக்கடி Ear buds பயன்படுத்தாதீர்கள். மேலும் ஊக்கு, குச்சி, கேர்பின் போன்றவை பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்குகளை பயன்படுத்தாதீர்கள்.

காதுகளில் “கொய்ங்” என்ற சத்தம் கேட்பதற்கு காரணம் என்ன தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement