Cucumber Side Effects
வெள்ளரிக்காயில் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியிருக்கிறது. மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிக்காய்களில் உள்ளன. கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் இருப்பதால் எடை குறைவதற்கும் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கும் வெள்ளரக்காய் பெரிதும் உதவியாக இருக்கிறது.
வெள்ளரிக்காயை மட்டும் சாப்பிட்டாலும் சரி, இல்லையென்றால் சிறிதளவு மிளகாய் பொடி தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கின்றது. அதனை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வெள்ளரிக்காய் தீமைகள்:
வெள்ளரிக்காய் சாப்பிடும் அனைவரும் இதை கட்டாயமாக தெரிந்துக்கொள்ளுங்கள்..!
சிறுநீரக பிரச்சனை:
வெள்ளரிக்காயில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அதிகமாக எடுத்து கொண்டால் வாய்வு பிரச்சனை, வயிற்று பிடிப்பு, சிறுநீரகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சனை:
வெள்ளரிக்காயில் குக்கூர்பிடசின் என்ற மூலப்பொருள் உள்ளது. இதை நீங்கள் அதிகமாக சாப்பிடும் போது செரிமான பிரச்சனை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீர்சத்து குறைபாடு:
வெள்ளரிக்காய் விதைகள் குக்குர்பிடினின் முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. இவை வெள்ளரிக்காயில் உள்ள ஒரு அங்கமாக இருக்கிறது. டையூரிடிக் பண்புகளுடன் தொடர்புடையது. பெரும்பாலானவர்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்காக வெள்ளரிக்காயை சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை அதிகமாக எடுத்து கொண்டால் டையூரிடிக் பண்பினால் உடல் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும்.
குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
இதயத்தில் பிரச்சனை:
வெள்ளரிக்காயில் 90% நீர்சத்து இருப்பதால் அதிகமாக சாப்பிடும் பொது இரத்த நாளங்களில் ஓடும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. மேலும் இவை எலக்ட்ரோலைட் நிலையை சரியாக இயக்காமல் இரத்த நலன்கள் மற்றும் இதயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா.!
கர்ப்ப காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது பிரச்சனை இல்லாமல் இருந்தாலும், இதில் டையூரிடிக் பண்பு இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். நார்சத்து அதிகமாக இருப்பதால் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |