தினமும் கருவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..?

curry leaves

கருவேப்பிலையில் இவ்வளவு நன்மையா..!

பொதுவா இந்த கருவேப்பிலையை (curry leaves) உணவின் மனத்தை அதிகரிக்கவும், சுவையை கூட்டுவதற்கும் தினமும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்துகிறோம்.

ஆனால் இந்த கருவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை பச்சையாக சாப்பிட்டால் எவ்வளவு நன்மை என்று உங்களுக்கு தெரியுமா?

கருவேப்பிலையில் விட்டமின் A, B, C, கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது. தினமும் கருவேப்பிலை பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கும், கூந்தல் நன்கு வளர்ச்சி அடைவதற்கும் பயன்படுகிறது.

சரி வாங்க தினமும் கருவேப்பிலையை வெறும் வயிற்றில் கருவேப்பிலை பச்சையாக சாப்பிட்டால் ஏற்படும் நன்மையை பற்றி இந்த பகுதியில் நாம் காண்போம்.

கருவேப்பிலை பச்சையாக சாப்பிட்டால் தொப்பை குறையும்

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பொதுவாக இருக்கின்ற ஒரு பிரச்சனை தான் தொப்பை விழுவது. தொப்பையை வைத்து கொண்டு வெளியே நடமாடவே தயங்குவார்கள். இனி கவலை படாதீங்க.

தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி, தொப்பையை குறைப்பதற்கு உதவுகிறது.

இரத்த சோகைக்கு:

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையை சரி செய்கிறது.

சர்க்கரை நோய்க்கு:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதயத்தை பாதுகாக்க:

கருவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

செரிமான பிரச்சனைக்கு:

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.

சளி தொல்லைக்கு:

சளி தொல்லை உள்ளவர்கள் கருவேப்பிலையை (curry leaves) காயவைத்து பொடி செய்து தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெறலாம்.

முடி நன்றாக வளர்வதற்கு:

முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 15 கருவேப்பிலையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். அடர்த்தியாக முடி வளர்வதை உணர முடியும். நரைத்த முடி கருமையாக மாறும்.

கல்லீரலை பாதுகாக்க:

கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கல்லீரல்களில் தங்கி இருக்கும் தீங்கு விளைவிக்க கூடிய நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

மேலும் கருவேப்பிலையில் இருக்கும் விட்டமின் A மற்றும் C கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.