Daily Eye Care Tips in Tamil
உடல் உறுப்புகள் பல இருப்பினும் கண்கள் நமக்கு மிக மிக முக்கிய உறுப்பாகும்.
நாம் பார்ப்பதற்க்கு கண்கள் மட்டும் இல்லை என்றால் நம் நிலைமை என்னவாகும் என்று சற்று நினைத்துப்பாருங்கள்! பல பேர் கண் பார்வை இல்லாமல் தான் வாழும் உலகத்தினை கூட பார்க்க முடியாமல் பல கஷ்டங்களை அனுபவிப்பதை நாம் பார்த்திருப்போம், எனவே கண்ணின் முக்கியத்துவத்தினை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் கண்களின் ஆரோக்கியம் உங்கள் கைகளில் தான் உள்ளது. கண்கள் ஆரோக்கியத்திற்கு தினசரி சில பராமரிப்புக்களை நாம் காட்டாயம் செய்ய வேண்டும். உங்கள் கண்களை நீங்கள் தான் ஆரோக்கியமாகவும் எவ்வித நோய்களும் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது கண்களை பராமரிக்க தேவையான சில பயனுள்ள தினசரி குறிப்புகளை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
கண்களை தேய்க்க வேண்டாம்:
உங்கள் கைகளில் அழுக்குகள், பாக்டீரியாக்கள் மற்றும் தூசுக்கள் போன்றவைகள் இருக்கலாம். நீங்கள் உங்கள் கைகளை கொண்டு கண்களை தொடவோ தேய்க்கவோ செய்யும்போது உங்கள் கைகளில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் மற்றும் தூசுக்கள் நேரடியாக உங்கள் கண்களுக்குள் செல்லுகின்றன. இதனால் கண்களுக்கு பல கெடுதல்கள் வருகின்றன. எனவே கண்களுக்கு கைகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
Contact Lens Use Tips in Tamil:
கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியா மற்றும் பிற தீங்கும் விளைவிக்கும் நுண்ணுயிரிகளிடம் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்கலாம். கண்களுக்கு கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ்கள் (Contact Lens) பயன்படுத்துபவர்கள் காட்டாயம் உங்களது கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
கண்பார்வை பல மடங்கு அதிகரிக்க டிப்ஸ்..!
கண்கள் பலம் பெற:
- கண்களுக்கு ஓய்வு என்பது மிக மிக அவசியம். மற்ற உடல் உறுப்புகளை போன்றே கண்களுக்கு போதுமான ஓய்வினை கொடுக்க வேண்டும்.
- கண்கள்கள் ஆரோக்கியம் பெற போதுமான தூக்கம் தேவை. எனவே உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான தூக்கத்தை வழங்க வேண்டும்.
கண்களுக்கு தேவையான உணவுகள்:
அழகான ஆரோக்கியமான கண்களை பெற வேண்டுமா?
தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். வைட்டமின் A, வைட்டமின் K அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதினால் உங்கள் கண்களுக்கு போதிய வைட்டமின் மற்றும் கனிமங்கள் கிடைக்கின்றன. இது உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
கருவளையம் மறைய டிப்ஸ்..! கருவளையம் உடனே நீங்க..!
கருவளையம் எதனால் வருகிறது?
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் நேரடியாக கண்கள் மீது படுவதினால் கண்புரை போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே வெளியில் செல்லும்போது கட்டாயம் கண்களுக்கு கண்ணாடி (சன் கிளாஸ்) அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்கள் வறட்சி அடைதல், கருவளையம் வருவது, பார்வை குறைவு போன்ற கெடுதல்களிருந்து தப்பிக்கலாம்.
கண்களுக்கு ஓய்வு:
படிக்கும் போதோ அல்லது கணினியில் வேலை செய்யும் போதோ சிறுது இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக கணினி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கண்களுக்கு 5 நிமிடங்கள் குறைந்த இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கண்களின் மீது சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்களுக்கு கண்களை மூடிக்கொள்ளவும் பிறகு உங்கள் வேலையை செய்தால் கண்களின் சோர்வு நீங்கி கண்கள் புத்துணர்ச்சி அடையும்.
மேற்கண்ட குறிப்புகளை தினசரி பயன்படுத்தி உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |