இட்லி மாவில் பேக்கிங் சோடா போடுபவரா நீங்கள்..? அப்போ அதன் தீமைகளை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Disadvantages Of Adding Baking Soda To Idli Batter in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இன்றைய காலகட்டம் எந்தளவிற்கு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும், தொழிற்சாலை கழிவுகளும், வாகனப் புகைகளும் மற்றும் சுற்றுசூழல் மாசும் தான் காணப்படுகிறது. இப்படி பல நோய்களை உண்டாகும் காலகட்டத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம். இதன் காரணமாக நாமும் உண்ணும் உணவுகளை ஆரோக்கியமாகவும் சத்தான  உணவுகளையும் உண்ணவேண்டும்.

ஆனால் நாம் யாரும் அப்படி செய்வதில்லை. ஆரோக்கியமான உணவு என்று நாம் ஆரோக்கியமற்ற பொருட்களை உணவுகளில் போட்டு சாப்பிடுகிறோம். அதாவது நான் பேக்கிங் சோடாவை பற்றி தான் சொல்கிறேன். பொதுவாக நாம் அனைவருமே இட்லி மாவில் பேக்கிங் சோடாவை அதிகளவில் சேர்த்து வருகின்றோம். ஆனால் இதனால் என்னென்ன பக்கவிளைவுகள் வருகிறதென்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக அதன் தீமைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பேக்கிங் சோடா பயன்கள்..

இட்லி மாவில் பேக்கிங் சோடா சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்: 

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரது வீடுகளில் காலை மற்றும் மாலை உணவுகள் என்றால் அது இட்லி தோசையாக தான் இருக்கும். அப்படி இருக்கையில் ஒரே தெருவில் ஒன்றுக்கு மூன்று மாவு கடைகள் வந்துவிட்டன.

மேலும், வீடுகளில் இருந்து மாவு அரைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மாவு தொழிலானது ரொம்பவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் போது, பலரும் இட்லி பொசுபொசுவென வருவதற்காக அதில் பேக்கிங் சோடா சேர்க்கிறார்கள்.

ஆனால் இதனால் நமக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

பேக்கிங் சோடா Vs பேக்கிங் பவுடர்.. வித்தியாசம் என்ன தெரியுமா..

  • பொதுவாக பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதன் காரணமாக நமது இரத்தத்தில் இருக்கும் காரத்தன்மையை மாற்றுகிறது.
  • மேலும் இரத்தத்தில் காரத்தன்மை அதிகரிப்பதால் நம் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
  • பொதுவாக பேக்கிங் சோடாவில் சோடியம் பைகார்பனேட் அதிகம் இருக்கிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.
  • இதன் காரணமாக பேக்கிங் சோடா சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் கல்லீரலில் சர்க்கரையை கொழுப்பாக மாற்றிவிடுகிறது.
  • அதுபோல பேக்கிங் சோடாவில் பாஸ்போரிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது. இது எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • மேலும் இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

எனவே இனியாவது உணவுகளில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தாமல் இருபப்து நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement