டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ அதனால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று தெரியுமா..?

Advertisement

Disadvantages of Dragon Fruit in Tamil

நாம் இக்காலத்தில் சாப்பிடும் உணவுகள் உடலுக்கு பல நன்மைகளை கொடுத்தாலும்  அவற்றில் ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக எந்த ஒரு உணவையும் அளவோடு உட்கொண்டால் எந்த தீங்கும் வராது. ஆனால் அப்படி இல்லாமல் இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்தும். எனவே இதனை உணர்த்தி நம் முன்னோர்கள் ஒரு பழமொழியையும் கூறியிருக்கிறார்கள். ” அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” அதாவது என்ன தான் ஒரு உணவின் சுவை அதிகமாக இருக்கிறது என்பதால் அதனை அதிகமாக உட்கொண்டால் அது நம் உடலுக்கு விஷமாக மாறிவிடும் என்பதே பொருள். அதேபோல் டிராகன் பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை அளித்தாலும் அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது சில தீங்கினையும் ஏற்படுத்துகிறது. ஓகே வாருங்கள், டிராகன் பழத்தின் தீமைகள் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

What Are The Disadvantages of Dragon Fruit in Tamil:

அழற்சி பிரச்சனை:

 டிராகன் பழம் தீமைகள்

டிராகன் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஒரு சிலருக்கு அழற்சி பிரச்சனை வரக்கூடும். இதனால் தொண்டை அரிப்பு, நாக்கு மட்டும் உதடுகளில் வீக்கம் மற்றும் தொண்டையில் எரியும் உணர்வு போன்றவை ஏற்படும். எனவே இதனை அளவோடு சாப்பிடுவது நல்லது.

வயிற்று பிரச்சனைகள்:

 what are the disadvantages of dragon fruit in tamil

டிராகன் பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனை அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதாவது, குடல் வாயு, குடல் அடைப்பு, வயிற்று போக்கு மற்றும் வயிறு அசௌகரியமாக இருப்பது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குங்குமப் பூ தீமைகள்

குறைந்த இரத்த அழுத்தம்:

 dragon fruit disadvantages in tamilஅதிகமாக டிராகன் பழம் சாப்பிடும்போது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும். இது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

அதாவது, உடலில் இயல்பான நிலையை விட இரத்த அழுத்தம் குறையும் போது தலைசுற்றல், சோர்வு, குமட்டல், மனசோர்வு மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிகப்பு நிற சிறுநீர் வெளியேற்றம்:

டிராகன் பழத்தை சரியான அளவில் உட்கொண்டால் சிறுநீர் சிகப்பு நிறத்தில் வெளியேறும். ஆனால் அதுவே அதிகமான அளவில் உட்கொள்ளும் போது இந்த அறிகுறி அதிகமாகும். எனவே டிராகன் பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.

நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகிக்கும்:

 disadvantages of dragon fruit in tamil

டிராகன் பழத்தில் வைட்டமின் சி போன்ற பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டிராகன் பழத்தை அதிகமாக உட்கொள்வதன் மூலம் அதிகப்படியான பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் சேர்கிறது. இது நுரையீரல் புற்றுநோக்கு வழிவகிக்கும்.

சிறுநீரக பாதிப்பு :

அதிகமாக டிராகன் பழம் உட்கொள்ளவேண்டாம் எப்போதாவது சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. பாதிப்பும் பெரிதாக ஏற்படாது. ஆனால் அதிகமாக டிராகன் பழம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும். சிறுநீரக தொற்று இருப்பவர்கள் அதிகமாக இந்த டிராகன் பழத்தை சாப்பிடுவதை தவிருங்கள்.

யாரெல்லாம் ட்ராகன் பழம் சாப்பிட கூடாது:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ட்ராகன் பழத்தை எடுத்து கொள்ள கூடாது. இது நார்ச்சத்து நிறைந்த பழமாக இருந்தாலும் கூட இதில் இனிப்பு இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழம் எடுத்து கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் இதனை எடுத்து கொள்ள கூடாது.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க.. மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement