Disadvantages of Eating Chapati Daily in Tamil | சப்பாத்தி தீமைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சப்பாத்தி தீமைகள் (Disadvantages of Eating Chapati Daily in Tamil) பற்றி பார்க்கலாம் வாங்க. சப்பாத்தியை விரும்பி சாப்பிடாத ஆட்களே இல்லை. அதிலும் குழந்தைகள் மூன்று வேலைகளிலும் சப்பாத்தி வேண்டும் என்று அடம் பிடித்து சாப்பிடுவார்கள். சப்பாத்தி சாப்பிடுவது ஒரு புறத்தில் நமக்கு நல்லது என்றாலும் மறுபுறத்தில் நமக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. பொதுவாக எந்தவொரு உணவையும் சரியான அளவில் எடுத்து கொண்டால் உடலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டால் உடலில் நோய்களும் வர ஆரமித்து விடும். அந்தவகையில் சப்பாத்தியை அளவுக்கு அதிகமாக அதாவது, தினமும் சாப்பிட்டால் நம் உடலில் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீட்டில் சப்பாத்தி செய்யும் போது சப்பாத்தியை எண்ணக்கூடாதாம்..! ஏன் தெரியுமா..?
தினமும் சப்பாத்தி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் | Side Effects of Eating Chapati Everyday:
சப்பாத்தி செய்ய பயன்படும் கோதுமை மாவில் குளூட்டன் என்ற புரோட்டீன் உள்ளது. இது கோதுமையில் உள்ள ஸ்டார்ச்சுடன் சேர்ந்து இருக்கும். இது கோதுமை மாவிற்கு நெகிழ்வு தன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
கோதுமையில் இந்த குளூட்டனின் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது.
சப்பாத்தியை தினமும் சாப்பிடுவதால் குடல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், தோல் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவற்றையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே குளூட்டனின் அதிகமாக இருக்க கூடிய கோதுமை மாவில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் எல்லாம் அளிக்கப்படுகிறது.
அதாவது, நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள நல்ல சத்தினை மட்டும் பிரித்தெடுத்து மீதமுள்ள கழிவுகளை வெளியேற்றுவது தான் நல்ல பாக்டீரியாக்களின் வேலை.
ஆனால், தினமும் நாம் குளுட்டனின் அதிகம் உள்ள சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளும்போது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவும் அளிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. அதாவது, நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள நல்ல சத்துக்களும் கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது.
எனவே, சப்பாத்தியை தினமும் சாப்பிடாமல் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே சாப்பிடுவது நல்லது.சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ அதனுடைய தீமைகள் என்னென்ன தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |