இந்த வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு முன்பு அதில் உள்ள தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Disadvantages of Eating Ice Cream in Tamil

வெயில் காலம் வந்து விட்டால் அனைவரும் குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்கிரீம், போன்றவற்றை சாப்பிட தொடங்கி விடுவோம். வெயில் காலத்தில் குளிர்ச்சியாக சாப்பிடுவது நல்லது தான் உடலில் உள்ள சூடு நீங்கும். இருப்பினும் அவற்றை தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடலில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா..? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை எப்போதாவது சாப்பிட்டால் பரவாயில்லை. ஆனால் தினமும் சாப்பிடுவது மிகவும் தீங்கான ஒன்று. எனவே ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

மூளைக்கு தீங்கு விளைவிக்கும்:

 disadvantages of eating ice cream daily in tamil

அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அறிவாற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் சக்தி குறைந்து விடுகிறது என்று அறிவியல் ஆய்வில் கூறப்படுகிறது.

ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..?

உடலில் சோம்பலை ஏற்படுத்துகிறது:

 what are the disadvantages of eating ice cream in tamil

ஐஸ்கிரீமில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அது செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இதனால் உடல் சோம்பலாக மாறிவிடுகிறது. மேலும் இரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தொப்பை அதிகரிக்கும்:

 disadvantages of eating ice cream in tamil

ஐஸ்கிரீமில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. எனவே ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகரித்து தொப்பையை ஏற்படுத்தும்.

எடையை அதிகரிக்கும்:

 ice cream disadvantages in tamil

ஐஸ்கிரீமில் சர்க்கரை, கலோரிகள் மற்றும் கொழுப்பு போன்றவை அதிக அளவில் உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதனை அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் கூடுதல், இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டால் 1000 கலோரிகள் உடலில் சேருகிறது. எனவே இது உடல் பருமன் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..?

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்:

 ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

ஐஸ்கிரீமில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இதனை நாம் உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்:

 side effects of eating ice cream daily in tamil

ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடுவதால் உடலின் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. எனேவ இது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று ஆய்வில் கூறப்படுகிது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement