தக்காளி சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Disadvantages of Eating Tomatoes 

உணவு என்பது நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அந்த உணவினை நமக்கு பிடித்தவாறு வெவ்வேறு வகைகளில் சமைத்து சாப்பிட்டு வருகிறோம். அப்படி சமைக்கும் எல்லா சாப்பாட்டிலும் தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் இவற்றை எல்லாம் சேர்ப்பது வழக்கமான ஒன்று. அதுவும் தக்காளி இல்லாத சாப்பாடு ஒரு சாப்பாடா என்றும் சிலர் சொல்லிவிட்டு அந்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்கள். இப்படி நாம் எந்த சாப்பாடு சமைத்தாலும் முதலில் தக்காளி வேண்டும் என்று தான் கூறுகின்றோம். ஆனால் இந்த தக்காளியில் நமக்கு தெரியாத சில தீமைகளும் உள்ளது. ஆகையால் தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ உங்களுக்கு தெரியுமா..? தேங்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று…

தக்காளியில் உள்ள சத்துக்கள் என்ன.?

 தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் B6, வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து, நியாசின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், மாவுச்சத்து, தாமிரம் மற்றும் போலேட் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது. 

எண்ணற்ற சத்துக்கள் தக்காளியில் இருந்தாலும் கூட அதனை அளவுக்கு அதிகாமாக சாப்பிடும் போது உடலுக்கு சில தீமைகளை விளைவிக்கிறது.

தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் 

வயிறு பிரச்சனை:

வயிறு பிரச்சனை

மாலிக் மற்றும் சிட்ரிக் என்ற இரண்டு அமிலங்கள் தக்காளியில் உள்ளது. இத்தகைய அமிலங்கள் நிறைந்த தக்காளியை நாம் அதிகமாக சாப்பிடுவதனால் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த செய்யும். ஆகாயல் தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.

உடலில் அலர்ஜி:

உடலில் அலர்ஜி

உடலில் அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் தக்காளி சாப்பிடுவதனால் அலர்ஜி வரும் என்ற நபர்கள் தக்காளி சாப்பிட கூடாது. அதுமட்டும் இல்லாமல் தக்காளியில் ஹிஸ்டமைன் என்ற பொருள் இருப்பதால் இதனை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போதும் இருமல், தும்மல், சளி போன்ற போன்ற பிரச்சனைகள் வருவதால் தக்காளியை சாப்பிட கூடாது.

சிறுநீரகத்தில் கல்:

சிறுநீரகத்தில் கல்

நாம் தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக தக்காளி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடலில் ஆக்சலேட் மற்றும் கால்சியம் இரண்டும் உருவாகி அதன் பிறகு சிறுநீரகத்தில் கல் வரும் வாய்ப்பினை ஏற்படுத்தி விடும்.

தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

கர்ப்பிணி பெண்கள்:

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் போதுமான அளவு அதிகமாக தக்காளி சாப்பிடக்கூடாது. தக்காளியில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் கூட அதனை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக சில விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அளவோடு மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சாப்பிட வேண்டும்.

மூட்டு வலி வீக்கம்:

மூட்டு வலி வீக்கம்

தக்காளி அதிகமாக சாப்பிடும் போது கால்சியம் நமது உடலில் அதிகரிக்கும் அதனால் உடலில் மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே மூட்டு வலி உள்ளவர்கள் தக்காளியை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியினை அதிகரிக்கும்.

தக்காளி சாப்பிட வேண்டிய நபர்கள்:

  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்
  • கண் பார்வை குறைவாக உள்ளவர்கள்
  • செரிமான கோளாறு
  • முகத்தில் பருக்கள் உள்ளவர்கள்

தக்காளி சாப்பிடக் கூடாத நபர்கள்:

  • சிறுநீரக கல் உள்ளவர்கள்
  • அலர்ஜி உள்ளவர்கள்
  • நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே தக்காளியை சரியான அளவில் சாப்பிட வேண்டும். ஆகவே எதையும் நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலில் சில தீமைகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement