அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா?

valai meen demerits in tamil

அதிகம் சாப்பிடக்கூடாத மீன்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன்களின் வகைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது. மேலும் எந்த மீன்களை அதிகம் சாப்பிடக் கூடாது என்று பார்க்கலாம் வாங்க.

வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

வாளை மீன்:

vaala meen

வாளை மீனில் அதிக அளவான பாதரசங்கள் இருக்கிறது. இந்த மீனில் 976 ppm (Parts per million) பாதரசம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த வாளை மீன்களை அளவாக சாப்பிடுவது நல்லது. அப்படி அதிகமாக சாப்பிட்டு வந்தால் மூளையின் செல்களை சேதமடைய செய்கிறது.

சுறா மீன்:

sorrah

சுறா  மீன்களில் பால் சுறா மட்டுமே உடலுக்கு நன்மைகளை அளிக்க கூடியது. மீதமுள்ள சுறா மீன்கள் எல்லாமே உடலுக்கு தீங்குகளை அளிக்க கூடியதுதான். மேலும் சுறா மீன்களில் அதிக அளவு பாதரசங்கள் இருப்பதால் இதை உணவில் தவிர்ப்பது நல்லது.

சால்மன் மீன்கள்:

salmon

சால்மன் மீன்கள் ஆனது சமையலுக்கு சுவையான மீனாக இருக்கிறது. ஆனால் இதில் அதிக அளவு கரிம மாசுக்களை கொண்டுள்ளது. எனவே இந்த சால்மன் மீன்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.

விலாங்கு மீன்:

vilangu meen

விலாங்கு மீன் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் விலாங்கு மீன்களை சாப்பிடுவது உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும். பாதரசங்கள் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு தேவையில்லாத தீங்குகளை  உண்டாக்கின்றது.

கானங்கெளுத்தி மீன்: 

kana keluthi meen

கானங்கெளுத்தி மீன்களில் உள்ள  மெக்னீசியம் உடலுக்கு நல்லது என்றாலும், ஆனால் அதில் உள்ள பாதரசங்கள் உடலுக்கு அதிகமான தீய தாக்கத்தை விளைவிக்க கூடியது.

சூரை மீன்கள்:

tuna fish

பெரிய கண்களையும், நீல நிற துடுப்புகளை உடைய இரண்டு வகையான சூரைதான் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்க கூடியது. இந்த மீன் ஆனாது அதிகமான பாதரசங்களையும் கொண்டுள்ளது. எனவே இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil