வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடல் உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா..?

Updated On: November 14, 2023 12:24 PM
Follow Us:
Disease Symptoms Shown By Body Parts in Tamil
---Advertisement---
Advertisement

Disease Symptoms Shown By Body Parts in Tamil

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிவது எப்படி.? என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் உடல் உறுப்புகளில் ஏதும் அறிகுறிகள் ஏற்பட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். அதனை அறிந்து நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறியலாம் வாங்க..!

உங்கள் விரல் நகம் சொல்லும் நோய்..! 

உடல் உறுப்புகள் காட்டும் நோய் அறிகுறிகள் என்ன..? 

முகம் வீக்கமாக இருந்தால்: 

உடலில் தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் முகம் வீக்கமாக இருக்கும். தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் இரத்த செல்கள் விரிவடைந்து முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனை அறிந்து தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

கண்களில் தோன்றும் அறிகுறிகள்:

கண்களில் தோன்றும் அறிகுறிகள்

கண்கள் வீக்கமாக இருந்தால் சிறுநீரகங்கள் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். சிறுநீரகங்கள் அதன் வேலையை சரியாக செய்யவில்லை  என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேறாது. அந்த நேரத்தில் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

அதுபோல உடலில் மக்னீசியம் சத்து குறைவாக இருந்தால் கண் இமைகளில் வலி ஏற்படும்.

தோலில் தடிப்புகள் ஏற்பட்டால்:

தோலில் தடிப்புகள் ஏற்பட்டால்

தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் இருதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். உதாரணமாக காதுகளுக்கு பக்கத்தில் இருக்கும் தோல் தடிப்பாக இருந்தால் இருதய கோளாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

தோலின் நிறம் மஞ்சளாக இருந்தால்: 

தோலில் தடிப்புகள் ஏற்பட்டால்

தோல் இளம் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். கல்லீரல் பாதிப்படையும் போது நம் உடலில் இருக்கும் பித்த நீர் வெளியேறாமல் இருக்கும். இதனால் தான் தோல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

நாக்கின் நிறம் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை காட்டுகிறது தெரியுமா?

பாதம் மரத்துப் போவது: 

பாதம் மரத்துப் போவது

பாதம் அடிக்கடி மரத்து போனால் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நீரிழிவு நோயானது இரத்தத்தில் இருக்கும் செல்களை பாதிப்பது மட்டுமில்லாமல், நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுக்கிறது. இதன் காரணமாக தான் பாதம் சில நேரங்களில் மரத்துப் போகிறது.

பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல்: 

பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல்

பாதங்களில் வெடிப்புகள் இருந்தால் அது தைராய்டு பிரச்சனையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தைராய்டு சுரப்பியானது அதன் வேலையை சரியாக செய்யாமல் இருக்கும் போது பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இதை வைத்து தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

உள்ளங்கை சிவப்பாக இருந்தால்:

உள்ளங்கை சிவப்பாக இருந்தால்

உள்ளங்கை சிவப்பாக இருந்தால் கல்லீரலில் ஏதும் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். கல்லீரல் பாதிப்பு அடைந்தால் நம் இரத்தத்தில் இருக்கும் ஹார்மோனை அதனால் கட்டுப்படுத்த முடியாது. அந்த நேரத்தில் நம் உடலில் இருக்கும் இரத்தமானது அதிக சிவப்பு நிறமாக மாறிவிடும்.

அதுபோல உள்ளங்கையின் தோல் மிருதுவாக இருப்பதால் உள்ளங்கை சிவப்பு நிறத்தை வெளிக்காட்டும். இதை வைத்து கல்லீரலில் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now