இரவில் இந்த பழங்களை மட்டும் சாப்பிடாதீர்கள்..!

இரவில் சாப்பிட கூடாத பழங்கள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் இரவில் சாப்பிட கூடாத பழங்களை பற்றி தெரிந்துகொள்வோம். தினமும் இரவு எதாவது ஒரு பழம் சாப்பிட்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அதில் நீங்கள் இந்த பழங்களை இரவில் சாப்பிடலாமா என்று யோசித்து உள்ளீர்களா..! சில பழங்களை இரவில் எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். அது என்னென்ன பழங்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்..?

வாழைப்பழம்: 

eating fruits at night is good or bad in tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு தூங்குவதற்கு முன் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் உடலின் வெப்ப நிலையை அதிகரித்து தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும.

ஆப்பிள்:

ஆப்பிள்

அனைவருக்கும் பிடித்த பழம் ஆப்பிள். இந்த பழத்தை மருத்துவர்கள் சாப்பிட சொல்வார்கள். ஆப்பிள் சாப்பிடுவதனால் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் இரவில் ஆப்பிள் பழத்தை சாப்பிட கூடாது. இந்த பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். ஆனால் இரவில் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் போது வாயு பிரச்சனையை உண்டாக்கும்.

சப்போட்டா:

சப்போட்டா

சப்போட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் சப்போட்டா எடுத்துக்கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். அதனால் இரவில் சப்போட்டா பழம் சாப்பிடுவதை தவிர்த்திவிடுங்கள்.

தர்பூசணி: 

இரவில் சாப்பிட கூடாத பழங்கள்

தர்பூசணி மற்றும் நீர் சத்து நிறைந்துள்ள பழங்களை இரவில் சாப்பிடாதீர்கள். இந்த பழங்களை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடுவதனால் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டியிருக்கும். இதன் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

இரவில் பழங்கள் ஏன் சாப்பிடக்கூடாது.?

சூரியன் மறைந்த பிறகு பழங்கள் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். மேலும் உடலில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். பொதுவாக பழங்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும். இதனால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

இரவு நேரங்களில் பழங்களை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் தான் இரவில் பழங்களை சாப்பிட கூடாது என்று சொல்கின்றனர்.

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்.?

பழங்களை உணவில் சேர்த்து சாப்பிடபா கூடாது. பழத்தை மட்டும் தான் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips