அதிக வியர்வை வர காரணம்
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதர்களுக்கு அதிகமாக வியர்வை வருவது சாதாரணமானது தான். காற்று இல்லையென்றால் வியர்வை வரும். அதேபோல் நெருக்கமான இடத்திற்கு சென்றால் வியர்வை வர ஆரம்பம் ஆகும். வேலை செய்தாலும் வியர்வை ஏற்படும். ஆனால் ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்து இருந்தாலும் வியர்வை ஏற்படும். அதேபோல் சிலருக்கு கை கால்களில் மட்டும் அதிகமாக வியர்க்கும். அது எதனால் வியர்க்கிறது தெரியுமா..?
உள்ளங்கை வியர்வை வர காரணம்:
இதனை பாத கசிவுநோய் என்பார்கள். இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் இயல்புடையதாக அமைகிறது.
இந்த நோயால் உலக மக்கள் தொகையில் 5 சதவீத மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஏறத்தாழ 3.67 கோடி மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மனித உடற்செயல்களில் ஒன்று. உடலின் வெப்பச் சீராக்கல் ஆகும். இதில் வியர்வை சுரப்பிகளின் பங்கு முக்கிய பங்கு ஆகும்.
சாதாரணமாக உள்ளதை விட சிலருக்கு இயற்கைக்கு மாறாக அதிகமாக வியர்வை வருகிறது. குறிப்பாக இந்த நோயானது உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிகமாக வியர்வை சுரக்கிறது. அதேபோல் உடலில் வெப்பம் சீராக இல்லாமல் மனதளவில் உணர்ச்சி வசப்பட்டால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும்..? |
இந்த பாத கசிவு நோய் உடையவர்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் அதாவது உள்ளங்கை, பாதம் மற்றும் அக்குள் பகுதிகளில் அதிக வியர்வைச் சுரப்பு காணப்படும். இது 25 வயதிற்கு முன் உள்ளவர்களிடமிருந்து ஆரம்பம் ஆகும்.
காரமான உணவகள், சிகரெட், மதுபானம் குடிப்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.
இதற்கு என்ன தான் தீர்வு:
இதுபோன்று உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சுரக்கும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த ஒரு வழி உண்டு. ஆம் இப்படிப்பட்டவர்களுக்கு காக்கட்டான் இலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் ஆகிய மூன்றையும் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண்டி அளவு (5 மில்லி) தினமும் 2 வேளை குடித்து வர உடல் சூடு தணியும். இதனால் அதிகப்படியான வியர்வை கட்டுப்படும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |