நாட்டு கோழி முட்டையை சாப்பிடுவதால் என்ன நடக்கும்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாட்டு கோழி முட்டையின் நன்மைகள் பற்றி பார்க்க போகின்றோம். நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் முட்டையும் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. நாம் பிரியாணியுடன் முட்டையும் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. நாட்டு கோழி முட்டையில் அதிக ஊட்டச்சத்தை கொண்டுள்ளது. நாட்டு கோழி முட்டையின் விலை எப்போதுமே அதிகமாகவே இருக்கும்.அதற்கு காரணம் நாட்டு கோழி முட்டை குறைந்த அளவில் கிடைக்கிறது. அதனுடன் அதில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
மேலும், நாட்டுக்கோழி முட்டையில் அதிகம் புரதம், கால்சியம் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் , ஒமேகா 3, வைட்டமின் டி ,கோலின், லூடின் மற்றும் செலினியம் பாஸ்பரஸ் போன்றவரை கொண்டுள்ளன மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும், கண்பார்வையை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இயற்கை முறையில் உருவாகும் நாட்டு கோழி முட்டை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யாது. நாட்டு கோழி முட்டைகள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நன்மைகள் :

- நாட்டு கோழி முட்டையில் அதிகம் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இந்த முட்டையில் அதிக புரத சத்துக்கள் இருப்பதால் கண் குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
- தினமும் ஒரு நாட்டு கோழி முட்டையை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. நாட்டு கோழி முட்டையை சாப்பிடுவதன் மூலம் முடி மற்றும் நகங்கள் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
- நாட்டு கோழி முட்டையில் இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதால் இது நமது உடம்பில் ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்கிறது.
- ஒரு நாட்டு கோழி முட்டையில் 6 கிராம் புரத சத்துக்கள் இருப்பதால் இதை தினமும் சாப்பிடும் போது புரதச்சத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. முட்டையில் இருக்கும் அமினோ அமிலங்கள் நமது உடலில் தசை வளர்ச்சி மற்றும் ஹார்மோன் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் நாட்டு கோழி முட்டை சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கிறது.
- முட்டையில் ஓமேகா 3 அமிலங்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை ஆரோக்கியமாகவும் மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும் செய்கிறது. நாட்டு கோழி முட்டையில் சுமார் 147 மில்லிகிராம் கோலின் ஊட்டச்சத்து இருப்பதால் இது கல்லீரல் ஆரோக்கியம் மாற்றும் நரம்பு வளர்ச்சியை மேம்படுத்த செய்கிறது.
- ஒரு நாட்டுக்கோழி முட்டையில் சராசரியாக 70-80 சதவீதம் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வாரம் 3 முறை நாட்டு கோழி முட்டையை வேக வைத்தோ அல்லது பச்சை முட்டையாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
பச்சை முட்டை குடிப்பது நல்லதா.! கெட்டதா.!
தீமைகள் :
நாட்டு கோழி முட்டையில் சால்மோனல்லா பாக்டீரியா மற்றும் புரதம் அதிகம் இருப்பதால் சிறுநீரக பிரச்சனை முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையில் இருக்கும் சால்மோனல்லா பாக்டீரியா இருப்பதால் இதை பச்சையாக அதிகம் சாப்பிடும் போது தொற்று நோயை ஏற்படுத்த கூடும். எனவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடுவது நல்லது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |














