டீ குடிக்கும் பழக்கம்
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பர்களே..! காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் அனைவரிடத்திலும் இருக்கிறது. ஏனேன்றால் டீ குடித்தால் தான் அன்றைய பொழுது சுறுசுறுப்பாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஒருசிலருக்கு காலையில் டீ குடிக்காவிட்டால் தலைவலி வரும் என்று சொல்வார்கள். டீ குடிக்கும் பழக்கம் நல்லது இல்லை என்று ஒருசிலர் சொல்வார்கள் அதை கண்டு யாரும் பயப்படவேண்டாம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை டீ அல்லது காபி குடிக்கலாம் என்று பிரிட்டனின் நடத்திய ஆய்வில் நமக்கு பயன் அளிக்கும் விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி கவலை இல்லாமல் டீ காபி குடிக்கலாம். அதே போல் டீ குடிக்கும் போது சேர்த்துக்கொள்ள கூடாத உணவுகள் உங்களுக்கு தெரியுமா..? அது என்னனென்ன உணவுகள் என்று மேலும் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
டீயுடன் சேர்த்து உண்ண கூடாத உணவுகள்:
- பகோடா பஜ்ஜி
- முட்டை
- பச்சை காய்கறிகள்
- இனிப்பு பிஸ்கட்
- மஞ்சள்
மேலே கொடுக்கப்பட்டுள்ளதை டீயுடன் குடிக்கும்போது சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். அப்படி மீறி சாப்பிட்டால் உடலுக்கு எந்த விதமான பிரச்சனை வரும் என்று விரிவாக பார்க்கலாம்.
மழைக்காலம் வந்துவிட்டால் போதும் அனைவரும் விரும்புவது டீயுடன் சேர்த்து இந்த மாதிரியான உணவையும் சாப்பிடவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. ஆனால் அப்படி சாப்பிடக்கூடாது.
டீ குடிக்கும் போது கடலைமாவு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவதோடு, வயிறு தொடர்பான விளைவுகள் வரும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
ஒருசிலருக்கு டீயுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவது பிடிக்கும். மீறி அப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். டீயில் உள்ள டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும்போது அமிலங்கள் புரோட்டீன் கலவையாக மாறிவிடும். அதனால் மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற பிரச்சனை வரும்.
டீ குடிக்கும்போது பச்சை காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. அதிகமாக யாரும் சேர்த்து சாப்பிடுவதில்லை. அப்படி ஒருவேளை நீங்கள் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் டீயில் உள்ள டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் உடல் இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுத்து விடும்.தினமும் டீ குடிக்கும் போது இனிப்பு பிஸ்கட் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் அப்படி சாப்பிட கூடாது. டீயுடன் பிஸ்கட் சாப்பிடும்போது உடம்பில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு பாதிக்கும்.
காலையில் எழுந்ததும் டீ குடிப்பது பழக்கம் ஆனால் நீங்கள் டீ குடிக்கும்போது மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். மஞ்சள் சம்பந்தப்பட்ட உணவுகளை டீயுடன் சாப்பிடும்போது வயிறு பிரச்சனை வரும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |