முடி அடர்த்தியாக வளர ஜூஸ் பயன்கள் | Drinks For Hair Growth And Thickness in Tamil
ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த கேள்வி இருக்கும். நான் நேரத்திற்கு சாப்பிடுகிறேன் என்பார்கள். ஆனால் எனக்கு ஏன் முடி கொட்டுகிறது என்று. பொதுவாக நாம் சாப்பிடும் பொருட்களில் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கும். அதனால் தான் சமைக்கும் போது ஒரு பொருள் இல்லையென்றால் சமைக்க முடியாது என்பார்கள்.
ஏனென்றால் அனைத்தும் பொருட்களும் சேர்ந்தால் தான் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் தசைக்கும் மற்றும் பல உறுப்புகளுக்கும் தனி தனியாக பிரித்து அனுப்பும். நாம் எப்போதும் ஒரே விதமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமக்கு சரியான சத்துக்கள் கிடைப்பதில்லை.
அதேபோல் நம்முடைய முடிகளுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக கொட்டுவதற்கு ஆரம்பம் ஆகும். ஆகவே அதற்கு முன் நாம் சரியாக உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். சரி வாங்க இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொள்வோம்..!
Drinks For Hair Growth And Thickness in Tamil:
நம்முடைய உடலுக்கும் சரி மனதிற்கும் சரி சரியான அமைதி கிடைக்கவேண்டும். உடலுக்கு அமைதி என்றால் அது சரியான உடல் நிலை. அதனால் அதற்கு சரியான உணவு தேவை. சரி அப்படி என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இருக்கும். இதற்கு பெரிய அளவில் பட்டியல் தேவை இல்லை. இந்த பதிவில் சொல்லும் ஜூஸ் மட்டும் வாரத்திற்கு ஒரு முறை குடித்தால் போதும் உங்கள் முடிக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும் மேலும் உடலுக்கும் கிடைக்கும்.
முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 கேரட்டை சீவி சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு ஆரஞ்சு பழம் தோல் உரித்து ஒன்றை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து 2 பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளவும். அதில் இருக்கும் சதையை மட்டும் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பீட்ரூட்டில் பாதி தோல் சீவி சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து இரண்டு துண்டு இஞ்சி தோல் சீவி சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக சேர்க்க போகும் பழம் தான் மாதுளை பழம். இதில் பாதி பழத்தை மட்டும் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதன் பின் வடிகட்டி குடிக்கலாம், அல்லது அப்படியே குடிக்கலாம். இனிப்பு தேவை என்றால் சேர்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் அப்படியே குடிக்கலாம்.
அடர்த்தியாக முடி வளர, பொலிவான சருமம் பெற இதை செய்து சாப்பிடுங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |