முருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..! Drumstick leaves powder benefits in tamil..!

Drumstick leaves powder benefits in tamil

முருங்கை பொடி பயன்கள்..! Murungai keerai podi payangal..!

Drumstick leaves powder benefits in tamil:- முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது. மேலும் முருங்கையில் உள்ள அனைத்து பாகங்களும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய ஒரு மருத்துவ பொருளாக விளங்குகிறது. குறிப்பாக முருங்கை பொடியை இப்பொழுது பலவகையான நாட்டு மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்துகின்றனர். சரி இந்த பதிவில் முருங்கை பொடியை தினமும் சாப்பிடுவதினால் ஏற்படும் சில அற்புத மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது விட்டமின் A,B சத்து, இரும்பு சத்து, மினரல், அமினோ அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் முருங்கையில் நிறைந்துள்ளது.

40 கீரை வகைகள் அதன் பயன்களும்..!

Drumstick leaves powder benefits in tamil / Murungai keerai podi benefitsDrumstick leaves powder benefits in tamil

Murungai Keerai Powder Benefits in Tamil:-

1. முருங்கை பொடியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டு செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், உடலில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் உடலில் உள்ள உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கும்.

2. தினமும் முருங்கை கீரை பொடி சாப்பிடுவதினால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

3. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிடுவதினால் உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைத்து நம்மை சர்க்கரை நோயில் இருந்து பாதுக்காக்கும்.

4. நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் சாப்பிடும் உணவுகளில் முருங்கை பொடியை பயன்படுத்தலாம்.

5. நம் கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முருங்கை கீரை அல்லது முருங்கை பூவில் செய்த பொடியினை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிடுவதினால் கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை மற்றும் நச்சுத்தன்மையை குணப்படுத்தும்.

Murungai Keerai Benefits

 

6. முருங்கையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூசைகள் நம் சருமத்தில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களினால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும், மேலும் நிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொற்றுகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

7. முருங்கையில் ஏற்படும் அனைத்து பாகங்களும் நம் உடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. எனவே எதிர்பாராத விதமாக ஏற்படும் புண்களுக்கு முருங்கை இலையின் சாறினை அந்த புண்களில் அப்ளை செய்யலாம். இவ்வாறு செய்வதினால் சில நாட்களிலேயே அந்த புண்கள் ஆறிவிடும்.

இவ்வளவு பயன்கள் நிறைந்த இந்த முருங்கை பொடியினை ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

பீட்ரூட் ஜூஸின் பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்